உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வரும் பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5nu9v942&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜன. 10ம் தேதி முதல் ஜன.17 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க., போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.10) அறிவித்தது. இதையடுத்து தி.மு.க., வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது. இந் நிலையில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமாரை தி.மு.க., தலைமை இன்று(ஜன.11) அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இவர் தி.மு.க,.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர், தே.மு.தி.க.,வில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தவர். ஒரு காலத்தில் விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்றவராக இருந்த சந்திரகுமார், பின்னர் தி.மு.க.,வில் இணைந்தவர். 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் இல்லை என்பதால் அனேகமாக ஜன.13ம் தேதியன்று சந்திரகுமார் மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயோ-டேட்டா

தொகுதி: ஈரோடு கிழக்கு பெயர்: வி.சி.சந்திரகுமார்,57.கல்வித்தகுதி: எம்.ஏ., (பொது நிர்வாகம்)சொந்த ஊர்: ஈரோடுமனைவி: வி.சி.அமுதா (இல்லத்தரசி) மகள்கள்: ருசிதாஸ்ரீ (பி.டி.எஸ்.,), மகன் மெகர்வின்ஸ்ரீ (எல்.எல்.பி., இறுதியாண்டு)தொழில்: ஜவுளி வியாபாரம் ஜாதி: முதலியார்

கட்சி பொறுப்புகள்

* 1987 - தி.மு.க., வார்டு பிரதிநிதி* விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்*தே.மு.தி.க., மாநில கொள்கை பரப்பு செயலாளர்* 2011 - பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி முதல் எம்.எல்.ஏ., (தே.மு.தி.க.,)*2016 - ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி* 2016 - தி.மு.க., கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர்*ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி, 2 019ல் சேலம் லோக்சபா தேர்தல், 2021ல் குமாரபாளையம் சட்டசபை தொகுதி, 2023 லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

veera
ஜன 11, 2025 22:36

வைகுண்டம் ஒரு முழு நேர புளுகு மாஸ்டர்......ஹி..ஹி...


பேசும் தமிழன்
ஜன 11, 2025 22:35

விஜயகாந்த் அவர்களுக்கு துரோகம் செய்த இவர் வெற்றி பெறவே கூடாது...... தமிழக மக்களுக்கும் கண்டிப்பாக துரோகம் செய்வார் !!!


Ravichandiran A
ஜன 11, 2025 18:22

ஒ இவர் அவர்லோ கேப்ட... வாழ்த்துக்கள்


angbu ganesh
ஜன 11, 2025 12:46

பட்டையும் குங்குமம் இருக்காரேய் எப்படி தேர்ந்து எடுத்தானுங்க இல்ல ஊற ஏமாத்தவே


S.V.Srinivasan
ஜன 11, 2025 18:35

அதே டௌப்ட்தான் எனக்கும் ஹி ஹி ஹி


Sundar Venkat
ஜன 11, 2025 11:40

போன முறை ஆட்டுத் தொழுவத்தில் அடைத்து வைத்து செம்மறியாட்டுக் கூட்டம் போல மாக்களாக நடத்தினார்கள்.இந்த முறை கோழிப் பண்ணகளில் கோழிகளை அடைப்பது போல் அடைத்து வைப்பார்கள்.ஈரோட்டுப் பகுத்தறிவு கோழியின் தரத்தில் உள்ளது.


S.L.Narasimman
ஜன 11, 2025 11:34

போன தடவை பட்டியிலே சாதரணமா அடைச்சி தீனி போட்டாங்கெ. இந்த தடவை ஒன்னு கூட தப்பிவிடகூடாதுன்னு கழுத்திலே கயிறு போட்டு கட்டி போடூவாங்க.


தமிழ் மைந்தன்
ஜன 11, 2025 11:32

இன்றைய பேட்ட ரெடி


Svs Yaadum oore
ஜன 11, 2025 11:12

பாஜக வின் GST யால் இங்குள்ள தொழில்கள் நலிந்து விட்டதாம் .....ஆனால் இங்குள்ள திராவிட மந்திரிகள் சாராய கம்பெனி தொழில்கள் எல்லாம் நன்றாகத்தானே நடக்குது ....ஆற்று மணல் கொள்ளை இங்குள்ள மலையை பெயர்த்து கேரளா ஏற்றுமதி என்று பல லட்சம் கோடிகள் குவித்துள்ளார்களே ....


theruvasagan
ஜன 11, 2025 11:05

ஈர வெங்காயம் மண்ணிலேயே பகுத்தறிவு விலை போகாது என்று அவங்களே நம்பிட்டாங்க போல.


theruvasagan
ஜன 11, 2025 11:03

கடவுள் நம்பிக்கையை கடைந்தெடுத்த மூடநம்பிக்கை என்று சாடியவரின் பிறந்த மண்ணிலேயே பக்தி பழமாக காட்சி தரும் ஒரு அடிப்பொடி பகுத்தறிவு கட்சியின் வேட்பாளர். இதத்தான் படிக்கறது ராமாயணம். இடிக்கறது பெருமாள் கோயில்னு சொல்லுவாங்களோ. அட கெடக்குது. விட்டுத் தள்ளுங்க. உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானே. அவங்களுக்கில்லையே. விளக்கம் கேட்டா நெத்தியில இருக்கறது டால்கம் பவுடரும் தக்காளி சட்னியும் என்பானுக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை