உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு பனை வெல்லத்திற்கு உலகளாவிய அங்கீகாரம்; பிரதமர் மோடிக்கு நயினார் நன்றி

ஈரோடு பனை வெல்லத்திற்கு உலகளாவிய அங்கீகாரம்; பிரதமர் மோடிக்கு நயினார் நன்றி

சென்னை: தமிழகத்தின் ஈரோடு பனை வெல்லத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் அளித்த பிரதமர் மோடிக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்தார். அவரது அறிக்கை; பிரதமர் மோடியின் இன்றைய 140வது 'மன் கி பாத்' உரை, தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. ஈரோடு இயற்கை பனை வெல்லம் முதன்முறையாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானதைப் பிரதமர் பாராட்டியது நமது விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும். காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய சங்கராச்சாரியார் வட்நகரை 'குஜராத்தின் காசி' எனப் போற்றியதைக் குறிப்பிட்டது, நமது அழியாத பண்பாட்டுப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது.போதையிலிருந்து மீண்ட இளைஞருடன் பிரதமர் மோடி உரையாடியது, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கப் பெரும் உத்வேகம் அளிக்கிறது. தமிழக இளைஞர்களும் போதையைத் தவிர்த்து முன்னேற வேண்டும். தமிழ் உள்ளிட்ட 23 மொழிகளில் செயல்படும் மத்திய அரசின் 'சஞ்சார் சாத்தி' தளம் மூலம் இதுவரை 14 லட்சம் போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 5,000 கோடி மோசடி தடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். எனவே, தமிழக மக்களும் இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தித் தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து பயன்பெற வேண்டும்.வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமரின் உன்னத முயற்சிகளுக்கு, தமிழக மக்கள் அனைவரும் தொடர்ந்து பேராதரவு அளிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை