உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டம் தான்: ஸ்டாலின்

 ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டம் தான்: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: உலக மக்கள் அனைவரும், ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக, 2026ம் ஆண்டு நிச்சயமாக அமையும்.

உருமாற்றம்

ஆளுங்கட்சி நிம்மதியாக தன் பணிகளை கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும்தான், அரசியலின் இயல்பு. தமிழகத்தில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து, சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க., தான், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியும் நமக்கு உரிமைப் போராட்டம் தான். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும், மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றமும் உருமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அத்திட்டத்தையே முடக்குகிற மத்திய அரசை கண்டித்து, களமிறங்கி போராடிக் கொண்டிருப்பது தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தான். தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காமல், வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ., அரசை எதிர்த்து போராடுவதும் தி.மு.க., தான். நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என, அனைத்திற்கும் போராடுவது நாம்தான்.

தகர்ப்போம்

ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமைப் போர்க்களத்தில் நிற்கிறோம்; மறு கையில் கேடயத்தை ஏந்தி, மக்கள் நலனைப் பாதுகாக்கிறோம். போர்க்களத்தில் வென்றிட வேண்டும். மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தொடர வேண்டும். தமிழக மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என எதிரிகளும், உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர்க் களத்தில் நாம் செயலாற்றிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

MARUTHU PANDIAR
ஜன 01, 2026 21:59

மத்திய அரசு துரத்த வாள் வீச்சு பயிற்சி எதுனா உண்டா இல்ல வாய் வீச்சு மட்டும் தானான்னு மக்கள் கேக்கறாங்க


MARUTHU PANDIAR
ஜன 01, 2026 18:20

வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பேசாம அந்த காலத்து ராஜ தர்பார் மாதிரி சட்ட சபையை செட் அப் பண்ணி, முதல்வர் மட்டும் மஹாராஜா கெட் அப்பில் தலையில் கிரீடம், உடைவாள், கவரி வீசும் ஆட்கள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் . மந்திரிகளுக்கெல்லாம் அந்தக் கால ராஜா ராணி சினிமாவில் வருவது போல் மந்திரிக்கான தலைப்பாகை, டிரஸ் எல்லாம் போட்டு அமர வைக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசவை உடுப்பு, மற்றும் தலைப்பாகை. இப்படி மாற்றினால், உதிர்க்கப்படும் வசனங்கள் படு பொருத்தமா சும்மா தூள் டக்கரா இருக்கும் அப்படீன்னு பேசிக்கறாங்க.


ram
ஜன 01, 2026 14:59

தலைமை பொறுப்பை நீர் ஒழுங்க செய்திருந்தா உனக்கு ஏன் இந்த போராட்டம். நீ சரியில்லேன்னு ஒத்துக்க வேண்டியதுதானே..


V Venkatachalam, Chennai-87
ஜன 01, 2026 14:22

போராட்டமா? ஐயே அது தப்புங்க. பேயாட்டம் ன்னு சொல்ல நினைச்சி போராட்டம் ன்னு பேசிப்புட்டேன். டமில்ல பேசுறதுனால நாக்கு குழறி போச்சு.


Karunai illaa Nidhi
ஜன 01, 2026 13:30

ஒரு லட்சம் கோடி திருடுவதென்றால் சும்மாவா? போராட்டம் தான். இனி நீங்க போராடவே வேணாம் ஆட்சி மாறினதும் குடும்பத்தோட ஜெயிலுக்கு போங்க.


சத்யநாராயணன்
ஜன 01, 2026 12:43

ஆமாம் உண்மைதான் கொள்ளையடிக்கும் போதும் போராட வேண்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் போராட வேண்டும் தலைமறைவாக இருந்தும் போராட வேண்டும் திமுகவிற்கு தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்


Agni Kunju
ஜன 01, 2026 12:30

அடுத்து ஆட்சிக்கு வந்தாலும் இந்த போராட்டம் தான் உங்களுக்கு… எனவே உங்கள் மீது இரக்கப்பட்டு ஓய்வு தருகிறோம். மத்தியில் என்று ராகுல் பிரதமரோ… அன்று உங்களுக்கு போராட்டம் இல்லை அப்போது பார்ப்போம். சரி இந்த 5 ஆண்டுகளில் தங்களின் நிகரலாபம் அதிகம் தானே… பிறகென்ன அந்த நிகரலாபத்திற்க்காகத்தானே மறுபடியும் இந்த உருட்டு. போய் அடித்ததை அனுபவியுங்கள்.


SUBBU,MADURAI
ஜன 01, 2026 12:21

கருணாநிதி காலத்தை போன்று எதுகை மோனையில் பேசி அப்பாவி மக்களை ஏமாற்றியது போல இப்போதும் அதே போல பேசி மக்களை ஏமாற்ற முடியாது.


vbs manian
ஜன 01, 2026 12:17

கழகத்தின் திடீர் காந்தி பற்று பாசம் மெய்ஸிளிர்கிறது .இதே காந்தியை பற்றி இவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்களை பாருங்கள்.


SUBBU,MADURAI
ஜன 01, 2026 12:15

The two major states where the number of new companies formation has declined is West Bengal and Tamilnadu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை