உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் உங்க அப்பா வந்தாலும் முடியாது; கம்யூ., தலைவருக்கு இபிஎஸ் காட்டமான பதில்!

அதெல்லாம் உங்க அப்பா வந்தாலும் முடியாது; கம்யூ., தலைவருக்கு இபிஎஸ் காட்டமான பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காட்பாடி: ''வரும் 2026 தேர்தலில் சொந்தத் தொகுதியில் நான் தோற்கடிக்கப்படுவேன் என்கிறார் முத்தரசன். அதெல்லாம் உங்க அப்பா வந்தாலும் முடியாது,'' என்று காட்பாடியில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கம்யூனிஸ்ட் தலைவருக்கு காட்டமாக பதிலளித்தார்.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், இன்று வேலுார் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் இணைந்து சித்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.அவர் பேசியதாவது:அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம். நேற்று கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன்? கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில் தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.மக்களுக்கு பிரச்னை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா? பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜகவோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன். உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள். உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின், அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

pakalavan
ஆக 19, 2025 22:22

எடப்பாடி ஒரு பச்ச துரோகி,


Haja Kuthubdeen
ஆக 20, 2025 10:02

இப்ப எடப்பாடியார் தலைமையில்தான் அனைத்து தொண்டர்களும் பணியாற்றி வரோம்.


கோமாளி
ஆக 19, 2025 22:16

ஸ்டாலினுக்கு பழனிச்சாமி பரவாயில்லை. இரண்டு தீமைகளில் பாடி குறைந்த தீமை. தற்போதைய மன்னர் தீமையில் விளைந்த தீமைக்கு பிறந்தவர், தீமையாகவும் இருந்து தீய வம்சத்தை உருவாக்கியிருக்கிறார்


Shivam
ஆக 19, 2025 21:49

அப்ப ஓட்டு மெஷின் நீங்க சொல்றதத்தான் திலுப்பி திலுப்பி கேக்குமா


Haja Kuthubdeen
ஆக 20, 2025 10:05

ஓட்டு மெசின் ஓட்டையா இருந்திருந்தா 40/40 பிஜெபியல்லவா ஜெயித்திருக்கோனும்....


Balasubramaniam
ஆக 19, 2025 21:21

உண்மை


தாமரை மலர்கிறது
ஆக 19, 2025 21:19

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் கதை எப்போதோ முடிந்துவிட்டது. இனி சீனாவிற்கு செல்ல வேண்டியது தான்.


Karthik Madeshwaran
ஆக 19, 2025 20:58

பழனிச்சாமியின் அப்பாவே வந்தாலும், அவர் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகவே முடியாது. இவரெல்லாம் ஒரு தலைவரா ? அதிமுக கட்சிக்கு வேறு நல்ல தலைவரே இல்லையா ? காலக்கொடுமை.


guna
ஆக 19, 2025 22:30

ஆடிக்கு அமாவாசைக்கு வந்து கருத்து போட்டுட்டு ஓடி போயிடுவார்


சந்திரன்
ஆக 20, 2025 07:17

கார்த்தி ஸ்டாலின் பழனிசாமி யார் நல்ல தலைவர் முதல்வராக தகுதியானவர்


Haja Kuthubdeen
ஆக 20, 2025 10:07

அஇஅதிமுகவிற்கான தலைவரை நாங்க பார்த்துக்குறோம்..நீங்க மன்னர் பறம்பரைக்கே கொடி தூக்குங்க...


S.L.Narasimman
ஆக 19, 2025 20:58

மக்குஅரசன் ஊண்டியல் துரு பிடித்து ஒட்டை விழுந்து அநேக வருடங்கள் ஆகிறது. கட்சியை 25 க்கு அடகு வச்சி ரொம்ப நாளாச்சு. இப்படி பேசுனதுக்கு எதிர்பார்த்த மாதிரி இன்னும் அஞ்சோ பத்தோ போட்டு தருவாங்க.


Karthik Madeshwaran
ஆக 19, 2025 20:55

தலைவர் பதவிக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் பழனிசாமி. நன்றாக படித்த தமிழ்நாட்டு மக்கள் இவரை எல்லாம் தலைவராக ஏற்கவே மாட்டார்கள்.. கடந்த பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோற்றதே அதற்கு சாட்சி. பழனிசாமி ஒரு பச்சை துரோகி மறக்காதீர்கள்., தன்னை நம்பியவர்களை பலமுறை முதுகில் குத்தியவர். பகவத் கீதை சொன்னது போல, துரோகம் எப்போதும் துரோகத்தால் தான் வீழ்த்தப்படும்.


vivek
ஆக 19, 2025 22:29

பாவம் மாதேஷ். துண்டு சீட்டு முதல்வரை விட இவர் எவ்வளவோ மேல்...


Krusna
ஆக 21, 2025 11:06

நன்றாக படித்த தமிழ் மக்கள்... செந்தில் பாலாஜியின் தலைவருக்கு தான் ஓட்டு போடுவார்கள்.. பத்து ரூபாய் பாலாஜி.. தியாகி பாலாஜியின் தலைவர் தளபதிக்கு தான் படித்தவர்கள் முரசொலி மட்டும் படித்தவர்கள் ஓட்டு போடுவார்கள்.. ஒரு திருக்குறளை கூட பார்த்து ஒழுங்காக பிழை இன்றி படிக்க தெரியாத தலைவருக்கு ஓட்டு போடுவார்கள். இவர் ஒரு தமிழ் அறிஞர் இன் மகன்... வெட்கமாக இல்லை....இந்த திராவிட மாடல் அடிமைகளுக்கு... எங்கள் தலை எழுத்து


Oviya Vijay
ஆக 19, 2025 20:43

தினமும் பரப்புரை முடிந்ததும் தனக்கு கூடும் கூட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு இரவு தூங்கும் போது 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக அமைந்து விடும். மீண்டும் அரியணையில் ஏறி விடலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பாரென நினைக்கிறேன்... ஆனால் இவர் ஜெயிப்பதற்க்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை... தேர்தல் முடிவு வந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை இவர் மனம் தாங்குமா எனத் தெரியவில்லை... ஏனெனில் ஏற்கனவே 11 தோல்வி பழனிச்சாமி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்துக் கொண்டுள்ளனர்... அதிலே இன்னும் ஒன்று சேருமானால் என்னவாகும்... தேர்தல் முடிந்ததும் செல்லாக்காசு...


Sangi Mangi
ஆக 19, 2025 20:42

பிஜேபி க்கு கட்சியை குத்தகைக்கு விட்டது மறந்து போச்சு போல இடத்துக்கு தகுந்த மாதிரி மாறும் பாடிக்கு ,,,,,,


சமீபத்திய செய்தி