கடவுள்களும் கூட மகிழ்ச்சி தி.மு.க., ஆட்சிக்கு பெருமை
தி.மு.க., ஆட்சியில், நான்கு ஆண்டுகளில், 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதியாக கொடுத்தது மட்டுமின்றி, கொடுக்காததையும் தமிழக முதல்வர் செய்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், 110 விதியின் கீழ் ஜெயலலிதா ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. அடுத்து வர இருப்பது தமிழகத்துக்கான தேர்தல் திருவிழா. அதிலும் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும். தி.மு.க., தலைமையில் இருக்கும் கூட்டணி இரும்புக் கூட்டணி; இன்னும் 25 ஆண்டுகளுக்கு இதே கூட்டணி நிலைக்கும். தி.மு.க., ஆட்சியில் அனைத்து கடவுள்களும் கூட மகிழ்ச்சியாக உள்ளன. அதுவே ஆட்சிக்கு பெருமைமனிதர்கள் மண்ணில் இருக்கும் வரை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது. செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,