உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: 'மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கடலூரில் நிருபர்கள் சந்திப்பில், மா. சுப்பிரமணியன் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், அருகில் உள்ள மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் 8,713 சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, என மருத்துவ கட்டமைப்பு உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவத் துறையில் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

அப்டேட்டில் இல்லை!

மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அண்மையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதியான அரசியல்வாதியாக மாறி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த இ.பி.எஸ்., முயற்சி செய்கிறார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Hprasath
நவ 08, 2024 11:01

சார் ஹெல்த் டிபார்ட்மென்ட் ல இன்னும் சரியான முறையில் place மெண்ட் இன்னும் பண்ணல படிச்சும் படிச்சா படிப்புக்கு வேலை கிடைக்காம அதுவரைக்கும் வேற வேலை பாத்துட்டு போஸ்டிங் காக வெயிட் பண்றவங்க தான் இங்க அதிகம் எல்லாமே நிரப்பியாச்சுன்னு சொல்லதிகெய் ப்ளீஸ் மூணு வருசத்துக்கு முன்னாடியே கோவேர்ந்மேன்ட் ஆர்டர் போட்டதையே இன்னும் நிரபல ப்ளீஸ் பொய்களை அடித்து விடாதீர்கள்


என்றும் இந்தியன்
நவ 07, 2024 17:30

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை-மாசு???என்ன மாசு இதன் அர்த்தம் என்ன???தடுக்கிவிழுந்தால் தான் மருத்துவமனையா??? காய்ச்சல் மற்றும் வேறு வியாதிகள் என்றால் மருத்துவமனை இல்லையா????


magan
நவ 07, 2024 17:11

ஆமா உங்க தலைவர் கிட்ட சொல்லி ஒரு துண்டு சீட்டை வாங்கி கொடுங்க அவரு தான அப்டேட் ஆயிடுவப்பெல


என்றும் இந்தியன்
நவ 07, 2024 16:47

அது மாசு கருத்து என்றால் என்ன அர்த்தம். தவறான மாசு நிறைந்த மட்டரகமான என்று அர்த்தம் ஆகவே மாசு கருத்தை அப்படியே எல்லோரும் பாருங்கள்.


KRISHNAN R
நவ 07, 2024 12:58

நல்ல சொல்லராங்கபா... டீ டேய் லு


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 07, 2024 12:43

மாசு அவர்களே, அந்த இர்பானை கைது செய்யப்போறது எப்போ என்னிக்கு? நீங்க பேசின வசனம் யார் எழுதிக் கொடுத்தது?


sridhar
நவ 07, 2024 13:47

இர்பான் ஹிந்து மதத்துக்கு மாறினால் அடுத்த நிமிடமே அரசு மேல் கடும் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டும் .


Murthy
நவ 07, 2024 12:42

இனி முதல்வரும் அவரது குடும்பத்தாரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கட்டும் அப்புறம் மா.சு சொல்வதை நம்பலாம் . .......மறுத்துவர்களும் செவிலியர்களும் பனி நிரந்தரம் கேட்டு போராடுவது ஏன் என்ற ஐ இந்த அப்டேட் அரசியல்வியாதி சொல்வாரா??


SUBBU,MADURAI
நவ 07, 2024 13:05

சீமான் அப்டேட் ஆவது இருக்கட்டும். மருத்துவப் படிப்பை படிக்காமல் (LLB) சட்டப் படிப்பை படித்த நீங்கள் மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு எப்படி அமைச்சராக நியமிக்கப் பட்டீர்கள். நீங்கள் பொறுப்பு வகிக்கும் சுகாதாரத்துறைக்கு பெரும்பாலும் மருத்துவத்துக்கு படித்தவர்களைத்தான் அமைச்சர்களாக நியமிப்பார்கள் அப்படியுள்ள முக்கியமான துறைக்கு முதல்வர் உங்களை ஏன் நியமித்தார் தமிழக மக்களின் உயிருடன் விளையாடுவதற்கா? மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு ஒருமுறை வந்து பாருங்கள் அப்போதுதான் உங்கள் சுகாதாரத் துறையின் லெட்சணம் தெரியும். எனவே இந்தப் பதவிக்கு நீங்கள் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவர் என்பதை நீங்கள் பலமுறை நிரூபித்து இருக்கிறீர்கள் அதனால் டாக்டருக்கு படித்தவர்கள் நல்லவர்கள் (திமுகவில் அப்படி யாரும் கிடையாது) யாரையாவது சுகாதாரத் துறைக்கு அமைச்சராக்கி விட்டு மாரத்தான் ஓட்டப் பிரியரான நீங்கள் அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சராகி விடுங்கள் உங்களுக்கு புண்ணியமாகப் போகும்!


duruvasar
நவ 07, 2024 12:03

மாசு எந்தெந்த விழியாயங்களில் அப்டேட்டாக யிருக்கிறார் என்பதை தனது எக்ஸ் தலத்தில் பாடிவிட்டு மாரத்தான் ஓட்டத்தை தொடரலாம் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும்.


சுராகோ
நவ 07, 2024 12:01

பொய்யை உண்மை போலாம் பேசுவாதில் கைதேர்தவர்கள்


முக்கிய வீடியோ