உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம்: சொல்கிறார் கவர்னர் ரவி

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம்: சொல்கிறார் கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. அனைவரும் ஒன்று என்பது தான் சனாதனம்' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னையில், வள்ளலார் சிலைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைவரும் ஒன்று என்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. சனாதன தர்மத்தில் வேறுபாடு காட்டி சிலர் குளிர்காய விரும்புகிறார்கள். இதற்கு அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை ஜாதியோடு தொடர்புபடுத்தி பேசி, தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்கள்.

சனாதனவாதி

இன்று நிகழும் நிகழ்வு மிகவும் புனிதமான ஒன்று. இன்றைய தினம் நம் அனைவருக்கும் வள்ளலாரின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். ஒரு சங்கடமான சூழலில் நாடு கஷ்டப்பட்ட போது வள்ளலார் அவதரித்தார். எந்த உயிருக்கும் இடையூறு வந்தாலும் அதனை காக்க வேண்டும் என்பது தான் நமக்கு கற்பித்த பாடம். மனிதன், விலங்கு என அனைவரும் ஒன்றிணைவது தான் சனாதனம். ஜாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. சனாதன தர்மம் எந்த ஏற்றத்தாழ்வையும் கூறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

pmsamy
அக் 06, 2024 08:00

அனைவரும் ஒன்றுதான். சனாதனம் என்று சொல்கிறவன் மட்டும்


ஆதிவேல்
அக் 06, 2024 05:17

கீழே இறங்குங்க. நீங்க பாக்கற கெவுனர் வேலையை நான் பார்க்கிறேன். நாம எல்லோரும் ஒண்ணு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு.


கிஜன்
அக் 05, 2024 21:28

வீக்எண்டுல ...மனுஷன் நிம்மதியா டி.வி ...பார்க்கலாம்ன்னு பார்த்தா .... நம்ம நிம்மதியா கெடுக்கதுக்குன்னே ...இருக்காரு ... திட்டவும் முடியல ....திட்டாமலும் இருக்க முடியல .... மைண்ட் வாய்ஸ் ...


Ramesh Sargam
அக் 05, 2024 20:34

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கருணாநிதியின் வாரிசுகளுக்கு மட்டுமே, முதல்வர், துணைமுதல்வர் பதவி. இது சகுனித்தனம்.


J.Isaac
அக் 05, 2024 20:20

அப்பட்டமான பொய்.


rama adhavan
அக் 05, 2024 23:26

Avar


சாண்டில்யன்
அக் 05, 2024 19:26

அனைவரும் ஒன்று அனைவரும் பிராமணர்கள்


rama adhavan
அக் 05, 2024 23:31

அனைவரும் சமம். செட்டியார், முதலியார், தேவர், பிராமிணர், ஏனையோர் எல்லாரும் ஒரே குலம்.


என்றும் இந்தியன்
அக் 05, 2024 18:16

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு உபிஸுக்கு தெரிந்த ஒரே வார்த்தை "நீ தவறு" என்று சொல்வது என்ன வார்த்தை பிறரிடமிருந்து அவர்கள் கேட்டாலும். மிக மிக எளிய திருக்குறள் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" அறிவு என்று ஒன்று இல்லாததினால் தான் திருட்டு திராவிடம் அரசியல் வியாதிகள் என்ன செய்தாலும் அது மட்டும் சரி, அதற்கு டப்பா அடிப்பது ஆனால் மற்றவர்கள் நல்ல அட்வைஸ் சொன்னாலும் து அது தவறு என்று சொல்வது.


சாண்டில்யன்
அக் 08, 2024 06:40

அனைவரும் ஒன்று என்றால் ஆளுநர் மாளிகை சிப்பந்திகள் எல்லாம் ஏன் நாமம் போட்ட பீகாரி பிராமணர்களாக மாற்றிக் கொள்ள வேண்டுமாம்? முன்பு இருந்தவர்களே தொடர விட்டிருக்கலாமே


இறைவி
அக் 05, 2024 17:04

சாய் பிரகாஷ், அந்த அந்த வர்ணத்தவர் செய்யும் தொழிலை கொண்டே பிரம்மம் அந்த அந்த அங்கங்களிலிருந்து படைக்கப் பட்டதாக சொல்லப்பட்டது. உடல் உழைப்பை கொடுப்பவனை காலில் இருந்து படைத்ததன் நோக்கம் அவன் வெகு நேரம் நின்று உழைப்பவன் என்பதால். க்கால் என்றால் அவமானம் இல்லை. இறைவனிடமோ அல்லது பெரியோரிடமோ நாம் ஆசீர்வாதம் வாங்க காலில்தான் விழுகிறோம். மேல்நாடு போல கை குலுக்குவதோ முத்தம் கொடுப்பதோ இல்லை. காலுக்கு தலையை விட அவ்வளவு மரியாதை. தீட்டு என்பது இறை பணி முடியும்வரை சுத்தமாக இருப்பது. வழிமுறைகளை நன்கு பின்பற்றும் ஒரு குடும்பத்தில் தலைவனோ தலைவியோ குளித்து பூஜைகளை ஆரம்பித்துவிட்டால் அவர்களின் குழந்தைகள் கூட அவர்களை தொட முடியாது. இது அந்தண குடும்பத்துடன் நகு பழைய எல்லோருக்கும் புரியும். ஏன்? கொரோனா வந்த போது தொடாதே என்று சொன்னார்களே. அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் சில வழிமுறைகள் உண்டு. அது யாரையும் காயப் படுத்த அல்ல. ஆனால் பொய்யையே பரப்பும் உபிகளுக்கு இது புரிந்தாலும் புரியாத மாதிரிதான் நடிப்பார்கள்.


M.Sam
அக் 05, 2024 17:01

If all are equal , then Mr.Ravi should give his daughter or son to a SC./ST Family Will he give ??? No he cannot All are pure lie and motivated speech only One thing is for sure india is going to have internal chaos soon Which will affect our nation miserably


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 20:34

அதென்ன பாசு சமூக நீதியை கல்யாணம் செஞ்சிதான் நிரூபிக்கணுமா ???? சரி ... உங்க விவாதப்படியே பார்ப்போம் ....


sridhar
அக் 05, 2024 20:41

Can you not think beyond marriage. Through friendship also equality can be achieved. Don't be silly.


rama adhavan
அக் 05, 2024 23:43

ஏன் கொடுக்க வேண்டும்? அது அவர் விருப்பம் மட்டும் அல்ல? அவரது மகளின், மகனின் விருப்பம் கூட? பெண் கொடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் அவரவர் குடும்ப உரிமை. அங்கே கொடு, இங்கே எடு என எவனும் சொல்ல உரிமை எல்லை. இந்த கருத்துக்கே உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.


venugopal s
அக் 05, 2024 16:18

All are equal but some are more equal என்ற ஆங்கிலப் பழமொழியை உருவாக்கியதே சனாதனம் தான்!


நிக்கோல்தாம்சன்
அக் 05, 2024 19:35

அந்த குடும்பத்தை சொல்லவில்லை தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை