உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க தி.மு.க., அரசு முடிவு செய்திருப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yah6cnvi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய தி.மு.க., அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க., அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை தி.மு.க., அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது தி.மு.க.,வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். ஆனாலும், தி.மு.க., அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தி.மு.க., அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வீழ்த்தப்படுவது உறுதி, என தெரிவித்துள்ளார்.'

தகுதியுள்ள' ரொம்ப முக்கியம்

முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
நவ 14, 2024 08:59

எம்பி தேர்தலில் நாலு சீட் திமுக கூட்டணிகொடுத்திருந்தா இந்த வாய் நாற வாயாக பேசும்


manivannan
நவ 14, 2024 12:30

எந்த நாற வாய் தான் கடந்த 25 ஆண்டு காலமாக கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறது சீமானை தவிர. எல்லாமே நாற வாய்கள்தான் .


Rajarajan
நவ 14, 2024 06:16

தமிழக கஜானாவின் நிலை கோவிந்தா, கோவிந்தா. ஏற்கனவே பல லட்சம் கோடி கடன். போக்குவரத்து ஊழியரின் பண நிலுவை பிரச்சினை இதுவரை தீர்ந்த பாடில்லை. இந்த அழகில், இந்த அனைத்து குடும்ப அட்டை மகளிருக்கு இலவச பணம் யார் கேட்டது ? பின்னர் விலைவாசி உயர்ந்துவிட்டது, சொத்துவரி / குடிநீர் வரி பல மடங்கு / பத்திரப்பதிவு பல மடங்கு / பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது என புலம்ப கூடாது. அரசியல் பதவி ஆசை எல்லை மீறுகிறது. சுயநலம் நாட்டை சூறையாடுகிறது. இதில் மத்திய ஆளும் கட்சியாக இருந்தால் என்ன ? மாநில ஆளும் கட்சியாக இருந்தால் என்ன ? எரிகிற கொள்ளிகளில், எது நல்ல கொள்ளி ?? வேண்டாம் விபரீதம்.


அப்பாவி
நவ 14, 2024 03:50

எந்த தேர்தலிலும் ஜெயிக்காதவங்களுக்கு தேர்தல் பயமே கிடையாது. பளகிருச்சு இல்லியா குமாரு.


sankaranarayanan
நவ 13, 2024 20:50

தேர்தலுக்கு முன் பறக்கும் படைகள் எல்லா இடங்களுக்கும் சென்று பண விநியோகத்தை கண்காணித்து அதிக பணத்தை அபகரிக்கின்றனர் அதையே இப்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்று அரசே முன்வந்து அனைவருக்கும் தேர்தலுக்கு முன்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் இத்தி மட்டும் எப்படி அய்யா இந்த நீதிமன்றங்கள் தடுக்கவில்லை ஒழுங்கு படுத்த வில்லை. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது தேர்தலை முன்னிட்டு மக்களை வாசிக்கறப்படுத்தும் முயற்சி அல்லவா இத்தவிட வேறு என்ன நீதி மன்றங்களுக்கு வேண்டும்


ramesh
நவ 13, 2024 22:21

மஹாராஷ்டிராவில் 2100 மகளிருக்கு கொடுப்போம் என்று பிஜேபி தேர்தல் அறிக்கை விட்டது மட்டும் இனிக்கிறதா


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2024 20:06

இதுவே ஓட்டுக்குப் பணம் என்கிற திட்டம்தான் ........


karutthu kandhasamy
நவ 13, 2024 19:57

ரேஷன் கார்டில் இரண்டாவது பெயராக குடும்பத்தலைவியின் பெயர் இருந்தால் உரிமை தொகை ரூ 1000 மாதா மாதம் கிடைக்குமா ? விளக்கவும்


கண்ணன்,மேலூர்
நவ 13, 2024 21:56

இரண்டாவது பெயராக இருந்தாலும் சரி அல்லது திராவிட வழக்கப்படி இரண்டு குடும்பத் தலைவிகளின் பெயர் இருந்தாலும் சரி இந்த திராவிடமாடல் அரசு ஜனவரி மாதத்தில் இருந்து எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் 1000 ரூபாய் கண்டிப்பாக கொடுக்கும்


sankar
நவ 13, 2024 19:53

அதிகாரபூர்வ லஞ்சம்


mindum vasantham
நவ 13, 2024 19:52

திமுக கரண் தெளிவா ஒரே உடலமைப்பு நிறம் கொண்ட பராயரையும் , வன்னியரையும் அடிக்க விட்டு ஆட்சிக்கு வருபவர்கள்


Venkateswaran Rajaram
நவ 13, 2024 19:50

வரும் தேர்தலுக்காக அதிகாரப்பூர்வாமாக கொடுக்கப்படும் லஞ்சம் ...நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தை இந்த மாதிரி திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டு பின் மத்திய அரசிடம் சம்பளம் போட பணம் வேண்டும் என்று பிச்சை எடுப்பார்கள் ....மக்கள் என்று திருந்துவார்கள்???


முக்கிய வீடியோ