உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் தாரிகா சல்மான், ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது, ஈ.வெ.ரா குறித்து இவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. தாரிகா சல்மான் பேசியதாவது: என் மண்ணில் வந்து பெண் அடிமையை சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. வேலு நாச்சியார், வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டையிட்டார். அவர் காலத்தில் பெண் அடிமையை யார் உடைத்தது? யார் பெண்களுக்கு தைரியத்தை கொடுத்தது? அவர் கையில் வாளை கொடுத்து சென்று, வென்று வா என வேலு நாச்சியாரை ஈ.வெ.ரா அனுப்பி வைத்தாரா? அவர் இறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே ஈவெரா பிறந்தார்.

கருப்பை

அடிமை சங்கிலியை அறுப்பதாக போராட்டம் நடத்தி, அடுத்தவர்கள் பொண்டாட்டியின் தாலிகளை எல்லாம் அறுத்தார்கள். ஆனால், அவர்கள் வீட்டு பெண்களின் கழுத்தில் 20 பவுனில் தாலி தொங்குகிறது. கருப்பையை அறுத்து எறி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஈவெராவின் அம்மா அதை செய்திருந்தால் ஈவெரா எனும் தலைவலியே இருந்திருக்காது. அதே போல் ஈவெராவின் சிஷ்யர் கருணாநிதி தன் மனைவி, துணைவிக்கு இதனை சொல்லியிருந்தால், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என எந்த தலைவலியும் இருந்திருக்காது.

சூத்திரன்

ஆண்கள் போல முடி வெட்டுங்கள், உடை அணியுங்கள், ஆண்கள் போல் இருக்க வேண்டும் என ஈவெரா சொன்னதன் விளைவே இப்போது லெஸ்பியன், எல்.ஜி.பி.டி.க்யூ வரை நின்றிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எதற்கு என கேட்டார். தமிழ்த்தாயை வாழ்த்தாமல் மணியம்மையையா வாழ்த்துவது? உலகத்தமிழ் மாநாடும், கும்பகோணம் மகாமகமும் ஒன்று என சொன்னவர் ஈவெரா. ஜாதிக் கொடுமைக்கு எதிரானவர் என்ற ஈவெரா, ஜாதியை ஒழிக்க என்ன செய்தார்?பாரதியார், ‛வெள்ளை நிறத்தொரு பூனை' எனும் பாடலை எழுதினார். அதில் ‛எந்த நிறம் என்றாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ.. இந்த நிறம் சிறிதென்றோ, அந்த நிறம் ஏற்றம் என்றோ சொல்லலாமோ' என்றும் கூறியுள்ளார். ஒரே பாடலில் நிறவெறி உட்பட அனைத்தையும் சொல்லியவர் பாரதி. ஆனால் ‛சூத்திரன் ஒரு கோயிலில் எவ்வளவு தூரம் போகிறானோ, அதே அளவிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் போகலாம்' என காந்தியடிகள் சொன்னதற்கு, ஜாதியை ஒழிக்கிறேன் என நம் காதில் பூ சுற்றிய ஈவெரா, அவரின் விடுதலை பத்திரிகையில், பறையனும் சூத்திரனும் ஒன்றா என எழுதியுள்ளார். மேலும் சூத்திரன் என்பவர் இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத ஆதித்திராவிடர் அல்லாத, மீதி திராவிடர்களே சூத்திரர்கள் என்கிறார். அப்படியெனில் அவர் சமூகத்தை சேர்ந்தவர்களையே சூத்திரர் என்கிறார். காமராஜர் கருப்பாக இருப்பதை ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் தெரியுமா. முன்பெல்லாம் எருமை மாட்டு தோலைத்தான் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வார்கள், ஆனால் இப்போது எருமை மாடே ரஷ்யா செல்கிறது என்று பேசினார் ஈவெரா. இவர் ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க போராடினாரா?.

மது ஒழிப்பு

காங்கிரசுடன் இருக்கும் வரை மது ஒழிப்பு பற்றி பேசிய ஈவெரா, தனி திராவிட இயக்கம் துவங்கியதும், மது ஒழிப்பு ஒரு முட்டாள்த்தனம், கலவியை எப்படி கூடாது என சொல்ல முடியாதோ அதுபோல மது குடிப்போரையும் கூடாது என சொல்ல முடியாது என பேசினார். மதுவை ஒழித்தால் ஆண்டுக்கு 20 கோடி வருவாயை அரசு இழக்கும் என்று பேசிய ஈவெரா, எந்த போதைக்கு அடிமையானவர்?. பெண்களுக்கு விடுதலை இல்லையெனில் இந்த மண்ணில் இருந்து என்ன பயன் என்றும் இந்த மண்ணில் இருக்கும் அனைத்தும் தெய்வம், என் மனைவியும் தெய்வம் என்றும் சொன்னவர் பாரதியார். அவரை பார்ப்பான் என விமர்சித்த ஈவெரா, கட்டுன பொண்டாட்டிய ஊருக்கு புதுசா வந்திருக்கிற தாசி என அறிமுகப்படுத்துகிறார். அவர் மனைவி நாகம்மை இறந்தபோது கூட, நான் ஒரு அடிமையை இழந்துவிட்டேன் என்று சொன்னார். பெண் விடுதலை என்பது பிறருக்கு தான், தன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அல்ல. இவ்வாறு அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல இடங்களில் தாரிகா சல்மான் பேச்சை கை தட்டி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

நாஞ்சில் நாடோடி
டிச 26, 2025 09:48

ஒழுக்க சீர்கேட்டின் மொத்த உருவம் ...


Vijay D Ratnam
டிச 25, 2025 22:06

ஓ மை காட்,


visu
டிச 25, 2025 18:52

எப்ப ஒருத்தன் யுனெஸ்கோ என்று போலி விருது வாங்கினானோ அப்பவே அவன் சகல பெருமைகளை இழக்கிறான் உணமையான போராளிக்கு போலி விருது தேவையில்லை


K.Harihara
டிச 25, 2025 16:49

I dont know everyone Tell about Periyar soil, theres no such soil before telling that Read the article once again entire speech will be taking the reality what ever she was quoted from the Periyar quoted the words and taken from vidudhalai published News, theres nothing wrong she quoted about Periyar, dont cheeting the tamil nadu people this is not the 1967 period people will well defined by all the News.


RAJ
டிச 25, 2025 16:11

விவேக்ன்னு பெரு வச்ச கொஞ்சம் மூளை இருக்கும். ..பாவம் இந்த பயபுள்ள.


vivek
டிச 25, 2025 18:46

பாவம் dammam ஒட்டகம்


Rameshmoorthy
டிச 25, 2025 15:55

Do Muslim league agree to it??


Trueindian
டிச 25, 2025 15:04

பெரியார் என்கிற ராமசாமி நாயகர்தான்.


Chandru
டிச 25, 2025 14:27

Keep it up sister


S.L.Narasimman
டிச 25, 2025 13:07

சாதாரண மக்களும் கூட இப்போது ஈவெரா ஏமாற்று வேலை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். இனி தீமுக புதுகப்சா நாடகத்தை கையில் எடுக்கும் நேரம் வந்து விட்டது.


Sakthivel T.
டிச 25, 2025 12:55

வாழ்த்துக்கள் சகோதரி... அருமையான பேச்சு... வேடதாரிகளின் தோலுரித்து காட்டிவிட்டாய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை