மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
46 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 27
மூணாறு:கேரள முன்னாள் மின்துறை அமைச்சர் எம்.எம். மணியின் சகோதரர் லம்போதரன், அடிமாலி அருகே நடத்தும் சுற்றுலா மையங்களில் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையிட்டனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே குஞ்சுதண்ணி இருபது ஏக்கர் பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த எம்.எம். மணி உடும்பன்சோலை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் லம்போதரன் பைசன்வாலியில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமாக அடிமாலி அருகே இருட்டுகானம் பகுதியில் பல்வேறு சுற்றுலா பொழுது போக்கு அம்சங்களை கொண்ட சுற்றுலா மையம் உள்ளது. அதில் வரும் வருமானத்திற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தவில்லை என புகார்கள் எழுந்தன. அதனால் மத்திய ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் சுற்றுலா மையத்தில் சோதனையிட்டனர். 11 மணி நேரம் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. லம்போதரனிடம் விசாரித்தனர்.
46 minutes ago | 2
3 hour(s) ago | 27