உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை

அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை

சென்னை: ''தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்'' என மா.செ., கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 7) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அப்போது, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: * ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும். * பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும். * தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். *கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். 30% புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டனாக வாழ்த்துகிறேன்!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படவும், அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழகம் என மக்களை இணைத்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம். 'களம் 2026' தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கட்சியினரின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

சிந்தனை
ஜூன் 08, 2025 17:28

கிறிஸ்தவ கொள்கைகளையும் இஸ்லாமிய கொள்கைகளையும் தமிழின பண்பாடா அறிவித்தது தான் சாதனை


சிந்தனை
ஜூன் 08, 2025 17:27

நல்லது செஞ்சிருந்தா தானே எடுத்து பேச முடியும்...


suru
ஜூன் 08, 2025 11:38

அப்படி என்ன நல்ல திட்டங்கள் கொடுத்தீர்கள் mr.c.m


ஆரூர் ரங்
ஜூன் 08, 2025 14:07

அயலக அணித் திட்டம்.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2025 06:58

மக்களிடம் தமது சாதனைகளை சாதிக் பாட்சா, ஞானசேகரன் எழுச்சியுரை மூலம் பரப்ப வேண்டும்.


Bhakt
ஜூன் 07, 2025 23:21

எதாவது உருப்படியா இருந்தா தானே நைனா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 21:25

குன்றிய நாட்டு கொள்கை பாட்டிலுக்கு பத்து ரூபாய் , கள்ளச்சாராயத்துக்கு ஊக்கத்தொகை பத்து லட்சம் , வேங்கைவயல் , பொற்கூந்தலாரின் பொன்னான வசனங்கள் ஆகியவற்றை ஒருமுறைக்கு பலமுறை எடுத்துக்கூறினால் 250 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயமாக. கிடைக்கும்


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 07, 2025 21:14

ஒட்டு மொத்த இந்தியாவை ஆளுகின்ற காவிகும்பல் ஒரு மாநில கட்சியை ஒடுக்க தன்னாலான எல்லாவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கும்மிடிபூண்டி தாண்டுனா திமுக வை யாருக்கும் தெரியாது என சொன்ன அண்ணாமலையின் வாயை அடைக்கும் வகையில் இன்று துணை சபாநாயகரே தமிழ்நாட்டு CMStalin அவர்களின் ஆட்சியை பற்றி பேச நேரடியாக இறங்கும் அளவிற்கு இந்தியா முழுவதும் பேசபடும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்து விட்டது...


krishna
ஜூன் 07, 2025 21:43

EERA VENGAAYAM DHURVESH 200 ROOVAAV COOLIE KEDACHUDHAA.UNNAI PONDRA MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM KUMBALUKKU THUNDU SEATTU MATTUME ULAGAM POTTRUM THALAIVWRAAGA THERIUM.ADI MUTTAL.KOODA KONJAM SINDHITHU KARUTHU PODUVAAN.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 22:05

காவிக்கும்பல் ஆளும் மாநிலங்களில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் , கள்ளச்சாராய ஊக்கத்தொகை பத்து லட்சம் பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் அடாவடித்தனம், சார் தம்பி இதெல்லாம் கிடையாது சார்


ராமகிருஷ்ணன்
ஜூன் 08, 2025 07:39

ஆமா ஆமா இந்தியா முழுவதும் திமுகவினர் மீது காறித் துப்புவதற்கு பி ஜே பி தான் காரணம்.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 20:26

ஆம் திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் செயல்படாத திட்டங்களை பற்றி மக்களுக்கு எடுத்துத்துரையுங்க.


Dr. Suriya
ஜூன் 07, 2025 19:58

திருட்டு மாடல் அரசின் திட்டஙகளாக தமிழர்கள் பத்திரிக்கைகளில் வான்ந்தவை சொல்வது பொங்கல் தொகுப்பில் ரூவா 500 கோடி, வந்த ஆறே மாதத்தில் சின்னவன் அடித்த கொள்ளை 30000 கோடி பாட்டீலுக்கு பத்து ரூவாய் என்று அணிலார் அடித்த கொள்ளை, மின்சார கொள்முதலில் 4000 கோடி , ரசீது இல்லா மது விற்பனையில் ஆயிரம் கோடி கனிம வள திருட்டு என்று எண்ணிலடங்காமல்ப புறங்கை நக்கியது தான் சாதனை...


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 19:09

ஒவ்வொரு பூத்திற்கும் 30 , அதற்காகாகத்தான் பங்களாதேசிகளை உள்ளே பிளான் பண்ணி விட்டுட்டு இருக்கீங்க யுவர் ஹானர் ?


புதிய வீடியோ