உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=trx2dfcr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கலைசெல்வி(38) மற்றும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

2 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஏப் 27, 2025 07:17

இதெல்லாம் தினசரி சகஜமா நடக்கற விஷயங்கள். இதெயெல்லாம் நியூஸ் நு போடாதீங்க.


M VASAN
ஏப் 26, 2025 18:55

எந்த நகரமாக இருந்தாலும் ,கிராமமாக இருந்தாலும், காலையில் வீட்டை விட்டு கிளம்பினால்... இரவு வீடு வந்து சேர்ந்தால்தான் நிம்மதி.


rama adhavan
ஏப் 26, 2025 15:32

நேற்றுதான் ஓரு அறிவியல் அமைச்சர் சொன்னார், மனித உடல் மின்சாரம் தான் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்று. இன்றைய இந்த பட்டாசு வெடி விபத்துக்கு என்ன புதுமையான அறிவியல் அறிவு சார்ந்த காரணம் திருவாய் மலர்வாரோ. உடல் நடுங்குகிறதா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 26, 2025 14:58

கரண்ட் கணேசா கமான் , கரண்ட் கணேசா கமான்


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 14:41

ஒரு விபத்து கூட நடக்காத ஸ்டெர்லைட்டை பொய்ப்புகாரை கூறி வெளியேற்றினர் . அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது கேன்சர் வந்ததற்கு இன்றுவரை நம்பத்தகுந்த ஆதாரங்களை கொடுக்கமுடியவில்லை. மாதம் ஒருமுறை விபத்து நடந்து ஆண்டுக்கு 40 உயிர்களை இழந்தாலும் பாதுகாப்பற்ற பட்டாசுத் தொழில் தொடரும்.


எம். ஆர்
ஏப் 26, 2025 12:49

இந்த மாதத்திற்கான கோட்டா முடிந்ததா நான் பலமுறை முன்பே பதிவிட்டிருக்கிறேன். இந்த தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், மீறி மனிதர்களை ஈடுபடுத்துவதை கண்டால் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும் ஆளுக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு வரும் காத்திருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை