உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தேர்தல் முடியும் வரை வெடி சத்தம் கேட்கும்

 தேர்தல் முடியும் வரை வெடி சத்தம் கேட்கும்

இன்று, தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து உள்ளது.மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு, வரும் தேர்தலில் தனித்தே களம் காணும் அளவிற்கு, த.வெ.க.,வின் பலம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தமிழகத்தின் எந்த திசையில் திரும்பினாலும், மக்களின் உற்சாகமான 'விசில் சத்தம்' மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. இது வெறும் சத்தம் அல்ல; 234 சட்டசபை தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான வெடி சத்தம். இந்த சத்தம், சட்டசபை தேர்தல் முடியும் வரை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். தேர்தலில், பலருக்கு வைக்கப்பட்ட வெடியாக அது இருக்கும். - ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர், ஊடகம் மற்றும் செய்தி பிரிவு, த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kjpkh
பிப் 09, 2026 12:29

பார்த்து வெடிங்க. உங்கள் பக்கமே ரிவர்ஸ் ஆகிவிடப் போகிறது. வெடி வெடிக்க விடாமல் ஜனநாயகம் படம் இன்னும் முடங்கி கிடக்கிறது.


ramani
பிப் 09, 2026 05:12

அப்புறம் தவெகவிற்கு சங்கு ஊதும் சப்தம் தான் கேட்கும்