உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்

செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்

செங்கல்பட்டு,:Lசென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த விரைவு ரயிலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள, ஐந்தாவது நடைமேடையில் நிறுத்தி சுத்தம் செய்வது வழக்கம். நேற்று மாலை 5:00 மணியளவில், ரயிலை சுத்தம் செய்த பின், ஓட்டுநர் ரயிலை இயக்க முயன்ற போது, 'இன்ஜின் ஜெனரேட்டர்' பெட்டியின் சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ரயிலின் முன்பக்கம் இருந்த,'சென்டிங் லாக்'கை எடுக்காமல் ரயிலை இயக்கியதால், தடம் புரண்டது தெரிய வந்தது. குறிப்பிட்ட ரயில் பெட்டியை மட்டும் விட்டு விட்டு, பொதிகை விரைவு ரயில், எழும்பூர் சென்றது. இதனால் இரவு 8:10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ