உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை செப்.,30 வரை நீட்டிப்பு

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை செப்.,30 வரை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இபாஸ் நடைமுறை செப்., 30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ - பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுலா பயணிகள் இ - பாஸ் பெற்று சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர்.இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆய்வு செய்து வருகிறது. இ- பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ - பாஸ் நடைமுறையை செப்., 30 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ES
ஜூன் 28, 2024 19:20

Useless rule what else can you expect from these rulers


Nagarajan D
ஜூன் 28, 2024 16:50

முட்டாள்களின் ஆட்சியில் வேறு என்னா எதிர்பார்க்கமுடியும்... e pass உபயோகமற்றது... கேட்க்கும் அனைவருக்கும் கிடைக்கிறது பிறகு எதற்கு இந்த பைத்தியக்காரத்தனம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை