உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது

சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில், சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில், சித்த மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே கவரப்பட்டு மேல திருக்கழிப்பாளை கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் கவிமணி,22; காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற, தனது தாயாருடன், சிதம்பரம் மந்தக்கரை பகுதியில் உள்ள சித்த மருத்துவம் பார்த்துவந்த சரவணனிடம் நேற்று மதியம் சென்றார்.கவிமணியை பரிசோதித்த சரவணன், ஊசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு சென்ற கவிமணிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக அவரை சிதம்பரம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கவிமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிதம்பர நகர காவல் நிலையத்தில் திரண்ட உறவினர்கள், ஊசி போட்டதால் தான் கவிமணி உயிரிழந்தார். எனவே, சிகிச்சை அளித்த சரவணனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். அதில், சிதம்பரம் மந்தகரை பொன்னம்பலம் நகரை சேர்ந்த சரவணன், 52; என்பவர் முறையாக சித்த மருத்துவப் படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை