உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி டாக்டர் சிக்கினார்

போலி டாக்டர் சிக்கினார்

சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 48; டி.பார்ம்., படித்துள்ளார். அதே ஊரில், நான்கு ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார்.அவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போடுதல், தன்னிச்சையாக மருந்து வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். மேலும், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்து கூறுதல்; கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களையும் செய்து வந்தார்.சங்கராபுரம் அரசு தலைமை டாக்டர் ராஜ்மோகன் புகாரில், சேட்டுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ