உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஷாக்

ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஷாக்

மதுரை: மதுரையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மாற்றுத்திறனாளி கொடுத்த மருத்துவச்சான்று போலி என, கண்டறியப்பட்டது. அதை, 2000 ரூபாய்க்கு வாங்கியதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம், பேரையூரில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன், நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனுக்கு, மருத்துவச்சான்றின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டது. கணேசனிடம் விசாரித்ததில், எம்.கல்லுப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கதிர்வேல், 45, என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்து சான்றிதழ் பெற்றதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சுவாமிநாதன், உடனடியாக கதிர்வேலிடம் விசாரித்தார். அதில், கணேசனுக்கு தந்த மருத்துவச்சான்று போலியாக தயாரிக்கப்பட்டது உறுதியானது. அதை யார் தயாரித்து கொடுத்தது போன்ற விபரங்களை கதிர்வேல் சொல்ல மறுத்துவிட்டார். சுவாமிநாதன் புகாரின்படி, தல்லாக்குளம் போலீசார், கதிர்வேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'கதிர்வேல் கூறினால் தான் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், 'நெட்வொர்க்' ஆக செயல்படுகின்றனரா, எத்தனை ஆண்டுகளாக இதுபோன்று செயல்படுகின்றனர் என தெரியவரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
செப் 17, 2025 19:29

ஏன்? ரேட் கரெக்டாதானே கீது.


Anantharaman Srinivasan
செப் 17, 2025 11:59

ஒரு மருத்துவ சான்றிதழ் போலியா.. This quite simple when compare Sub registrar office. பத்திரபதிவுத்துறையில் போலி பத்திரங்களே உருவாக்கி தராங்களே.


Venugopal S
செப் 17, 2025 11:23

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற பழமொழிக்கு வழி வகுத்து விட்டாரே!


Hindu
செப் 17, 2025 09:47

இந்துமதவாத சக்திகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகளை இனம் கண்டு களையெடுக்க வேண்டிய தருணம் இது. அதனால் தான் ஒரு பெரியார் உருவானார்


ஆரூர் ரங்
செப் 17, 2025 11:08

தேச விடுதலையை எதிர்த்த ஈவே ராமசாமியை தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டசபையில் குரல் கொடுத்தது கருணாநிதி.


baala
செப் 17, 2025 09:43

எந்த ஆட்சி வந்தாலும் திருடர்கள் இருப்பார்கள் தானே. அவனவன் சுய ஒழுக்கம் பெற்று இருக்க vendum. இது போன்ற செயல்கள் அவர்களின் பிறப்பை உணர்த்தும் செயல். இங்கு கருத்து எழுதுபவர்களில் எல்லோருமே நல்லவர்களா? தீய செயல்கள் செய்ததில்லையா என்பதை இந்த தளத்திலேயே எழுதலாமே. நான் நல்லவன் என்று. .


GMM
செப் 17, 2025 09:32

மருத்துவர் சான்று வழங்க தன் பதிவேடு பராமரிப்பது அவசியம். மேலும் தன் அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், ஏராளமான சான்றுகளில் போலி நுழைந்து விடும். குழந்தையை தாய் பட்டினி கிடந்து பராமரித்து விடுவாள். காலை உணவு திட்டம் தேவையா? பெண்கள் இலவச பஸ் பயணத்திற்கு பதில் ஒரு குறைந்த பட்சம் மாத கட்டணம். அரசியல் கொள்கைகளை தணிக்கை செய்ய அதிகார அமைப்பு இல்லை. பல நீதிமன்ற தீர்வை பார்க்கும் போது அது பல் பிடுங்கிய பாம்பு போல் தெரிகிறது. திராவிட நாஸ்திக கொள்கையால் பெண்கள், முதியோர் தான் அதிகம் கைவிட பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. தற்போதைய நிலையில் குற்றம் குறையாது.


c.k.sundar rao
செப் 17, 2025 09:28

Whoever says I am Dravidian is a fraud.


kumz rocks
செப் 17, 2025 08:31

காமெடி கிங் மண்ட மட்டுமா போலி முகாமே போலி தானே


Kannan Chandran
செப் 17, 2025 08:27

அந்த சாக்ரடீஸ் அவார்டை விட இது பெரிதல்ல


V Venkatachalam
செப் 17, 2025 08:23

இது ஒண்ணே ஓண்ணுக்காக இந்த திட்டத்தை ஆதரிக்கிறேன். இது இல்லாமல் இருந்திருந்தால் இந்த போலி சான்றிதழ் பற்றி ஒண்ணுமே தெரியாமல் போயிருக்கும். கடைசியில் அந்த கதிர்வேலு இவனுங்க ...இருக்கலாம். அவனுடன் சம்பந்தபட்டவன் அல்லது இயக்குபவன் இவிங்க முந்திரியா கூட இருக்கலாம். அப்புடி இருந்துட்டா கண்டுபிடித்த அதிகாரிக்கு ஸ்பெஷல் கிப்ட் உண்டு. திராவிடியா மூடல் அரசு. எல்லாவற்றிலும் முதன்மை அரசு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை