உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்

தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 01) முதல் 40 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று (ஏப்ரல் 01) முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jeuxw5i6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் - புழல் நெடுஞ்சாலை, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் இன்று முதல் வசூல் செய்யப்படுகிறது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலானது.இந்த கட்டண நடைமுறை, 2026ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலானது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 01, 2025 18:45

சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்பது போல் டோல் வரி வசூலித்து ருசி கண்ட மத்திய அரசும் அதை கைவிடாது!


venugopal s
ஏப் 01, 2025 13:55

சங்கிகள் இதற்கும் நியாயம் கற்பித்து மத்திய பாஜக அரசின் முடிவை ஆதரிப்பார்களே!


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:39

யாரோ ஒருசில அதிகாரிகள் நன்றாக பிழைக்க நடத்தப்படும் இந்த IPL கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து கிரிக்கெட் பார்ப்பார்கள் நம் மக்கள். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக, ரோட்டின் தரத்தை உயர்த்த கட்டணம் வசூலித்தால் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் அதே மக்கள்.


hariharan
ஏப் 01, 2025 11:25

இப்பொழுது கட்டணத்தை கூட்டிவிட்டால் அடுத்த 2026 தமிழ்நாடு தேர்தல் வருவதற்கு முன் மக்கள் மறந்து விடுவார்களாம். திமுக, பாஜகவை ஏதாவது குறை சொல்ல வழி இருக்கிறதா என யோசித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் இதைவைத்து ஒரு வாரம் ஓட்டி விடுவார்கள்.


M Ramachandran
ஏப் 01, 2025 11:20

ஞ்யாமற்ற செயல். எந்த நாட்டிலும் இது போல் கொள்ளை கிடையாது. மாமண்டூர் வரை சாலை தரம் படு மட்டம். அதற்க்கு பின்பும் சொல்லி கொள்வது போல் இல்லை. இந்த லட்சணத்தில் 3 அல்லது 4 மாத்திற்கு ஒருமுறை விஷ ஊசி ஏற்றுவது போல் சாவாடி அடாவடி கொள்ளை.


Tamil Inban
ஏப் 01, 2025 10:02

உயிரை விடுத்து மீதம் எல்லாத்தையும் உறிஞ்சிடுவாங்க


பாமரன்
ஏப் 01, 2025 09:49

அடைங்கப்பா... என்னா நேக்கா மத்திய அரசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... சந்திர மண்டலத்தில் இருக்கும் யாரோ பண்ற மாதிரி நியூஸ் போட்ருக்காய்ங்க... இருந்தாலும் டீம்காவ திட்டனும் அப்ரசண்டிகளா... இதோ நானே ஆரம்பித்து விடறேன்... ஒப்பந்த காலம் முடிஞ்சும் கொள்ளை வசூல் நடக்கும் டோல் ப்ளாசாக்களை அடித்து நொறுக்காத டீம்கா ஒயிக


pmsamy
ஏப் 01, 2025 09:10

தமிழக அரசு இதில் தலையிட்டு சுங்கத் தொகையை குறைக்க வேண்டும்


KRISHNAN R
ஏப் 01, 2025 08:38

காலாவதி டோல்கேட் ம் சேர்த்து


अप्पावी
ஏப் 01, 2025 08:30

சாகற வரைக்கும் உருவுங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை