மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
17 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
28 minutes ago
ராமநாதபுரம் : வேளாண் பொறியியல் துறை இன்ஜினியர்கள் கிராமம் தோறும் சென்று, விவசாயிகளின் நிலை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் உணவுத்தேவையை நிறைவேற்ற வேளாண் துறையினரை விரைந்து பணியாற்றவும், இத்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி பணிகளை கொடுத்து அறிக்கை அனுப்ப அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தல், நீர்நிலைகள் வற்றும் போது விவசாயிகளுக்கு ஆயில் இன்ஜின் கொடுத்து, அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை பம்ப் செய்து கொண்டு வரச் செய்தல், குறைந்த வாடகைக்கு டிராக்டர், புல்டோசர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில் தமிழகம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இன்ஜினியர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
17 minutes ago
28 minutes ago