உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்

திருநெல்வேலி: நெல்லையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் துபாயில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நெல்லையைச் சேர்ந்தவர் மாதவன்(55). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அவரது மகன் கிருஷ்ண சங்கர் சென்னையில் சி.ஏ., படித்து வந்தார். தொழில்பூர்வ பயிற்சிக்காக அவர் துபாயிற்கு சென்றிருந்தார்.சம்பவத்தன்று, தந்தை-மகன் இருவரும் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கிய போது, கிருஷ்ண சங்கர் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மாதவன் நீரில் இறங்கியபோது, அவரும் மூழ்கி உயிரிழந்தார்.இருவரின் உடலும் இன்று காலை 6.30 மணிக்கு நெல்லையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் உறவினர்களால் சிந்து பூந்துறை மின்சாரச் சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இச்சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ahmedksdubaigmailcom
பிப் 21, 2025 10:33

இது மிகவும் வருத்தமளிக்கிறது, அவருடன் வசித்து வரும் எனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன், அவர் எங்கள் தமிழ் மக்களுக்கு உதவுகிறார், அவரது மற்றும் அவரது மகனின் ஆத்மா சாந்தியடையட்டும், நான் கடவுளை பிரார்த்திப்பேன்


Natchimuthu Chithiraisamy
பிப் 18, 2025 11:43

இது போல் நீரில் சம்பவங்கள் பல ஆண்டுகளாக செய்தியாக வருகிறது. இந்த செய்திகள் அணைத்து இளைஞர்களுக்கும் போய் சேரவேண்டும்


Jahir Hussain
பிப் 17, 2025 11:49

Very sad to hear... Deep condolences... May The God gives strength and patience to bear such huge loss to their family...


Jahir Hussain
பிப் 17, 2025 11:46

Very Sad ... விதி வலியது... Deep condolence to their family...


Subramanian
பிப் 17, 2025 07:59

மிகவும் துயரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Rasheel
பிப் 16, 2025 21:17

ஊழ்வினையை யாரும் மாற்ற முடியாது. பின்னணி பாடகி சித்ரா குழந்தை துபாயில் இறந்தது நினைவிற்கு வருகிறது.


v narayanan
பிப் 16, 2025 20:47

சோகம் .நீச்சல் தெரியாமல் எப்படி உள்ளே இறங்கினார் .குளத்தில் ஆபத்து உதவிகள் ஏன் இல்லை ?.


Krishnamurthy Venkatesan
பிப் 16, 2025 19:57

மிகவும் வேதனையாக இருக்கிறது. காற்றடைத்த lorry tube மற்றும் சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் பயின்றேன். atleast தங்களை மட்டுமாவது தற்காத்துக்கொள்ள முடியும். பள்ளிகளில் இதனை கட்டாய பாடமாக்க வேண்டும்.


sankaran
பிப் 16, 2025 19:17

இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர், சங்கர் மேல் நிலை பள்ளியில் படித்தவர் போல் தெரிகிறது... இந்த செய்தியை படிப்பவர்கள் உறுதி படுத்த கேட்டு கொள்கிறேன்..


Balaji
பிப் 16, 2025 18:49

ஆழ்ந்த இரங்கல்.. மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.. ஆனாலும் இவ்வளவு வளர்ந்த பய்யன் நீச்சல் குளத்தில் மூழ்கினான் என்பது சற்றே நம்ப மனம் மறுக்கிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை