உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு கார்கள் மோதலில் தந்தை, மகன் மரணம்

இரு கார்கள் மோதலில் தந்தை, மகன் மரணம்

பூவந்தி, : மதுரை ஆனையூரை சேர்ந்தவர் இக்னேசியஸ் ரோசாரியா, 50. இவர், மதுரை தலைமை தபால் நிலையத்தில் மக்கள் தொடர்பு ஆய்வாளராக பணிபுரிந்தார். நேற்று மதியம் தன், 'ரெனால்ட்' காரில் மகன் ஜோனாத்தன், 13, என்பவருடன், தேவகோட்டை சென்றுவிட்டு மதுரைக்கு திரும்பினர். காரை இக்னேசியஸ் ரோசாரியா ஓட்டினார். பூவந்தி - கீரனுார் விலக்கு அருகே மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற, 'இன்னோவா' கார், இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.சம்பவ இடத்திலேயே இக்னேசியஸ் ரோசாரியா பலியானார். ஜோனாத்தன் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மற்றொரு காரில் இருந்த ரஜாக், 65, மனைவி அனிதாபேகம், 56, நஸ்ரின், 45, சினாக், 25, கார் டிரைவர் ஆசிப், 30, ஆகிய ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்