உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக விரோதிகளுக்கு பயம் போய்விட்டது: போலீஸ் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

சமூக விரோதிகளுக்கு பயம் போய்விட்டது: போலீஸ் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், போலீசாரின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b385obia&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், தி.மு.க., அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், போலீசாரின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 08:56

தினமும் மாமூல் கொடுப்பவர்கள் எப்படிடா பயப்படுவார்கள் நீங்க காவல்துறையில் பணியாற்றியபோது கிடைத்த மாமூல் மொத்த தொகை எத்தனை ஆயிரம் கோடிகள் என்ற உண்மையை வெளியிடுவாயா?


Bala
ஜூன் 09, 2025 23:58

பாலியல் குற்றங்கள், கஞ்சா குற்றங்கள் , டாஸ்மாக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் என்றாலே திராவிட மாடல்தான்


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 09, 2025 22:17

நேற்று அமித் ஷா மீட்டிங் , வார் ரூம் வெச்சி நீங்கசெய்த செயல் ஷா வே கண்டு பிடித்து விட்டார் இப்படி தான் 2024 கூட்டம் கூடியது 23 தொகுதியில் போட்டி இட்டு எல்லாம் டெபாசிட் காலி , அன்று ADMK உடன் கூட்டு இருந்திருந்தால் 15 சீட் தேறி இருக்கும் ஆகவே உன் சாயம் பூசும் வேலை JANDAAA வுக்கு தெரிந்து விட்டது


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 09, 2025 22:09

தடா ராசி புளியந்தோப்பு அஞ்சலை இப்படி எல்லா ரவுடிகளை தேடி தேடி கட்சியில் சேர்த்தவர் முருகன் , எல்லா கேடி சமூக விரோதி எல்லாம் இப்ப உங்க கட்சயில் தான் , உன் லெவல் கூட அதே நிலை தான்


D.Ambujavalli
ஜூன் 09, 2025 18:52

ஒவ்வொரு இத்தகையக் குற்றவாளிக்கு ஏதாவது அரசியல்வாதியின் பின்புலம் இருக்கும். போலீஸ் பிடித்தாலும் அடுத்த நொடியே பிரசன்னமாகி விடுவிக்குமளவு செல்வாக்கிருப்பவர்கள் போலீசுக்கு எதற்காக பயப்படுவார்கள் ?


GMM
ஜூன் 09, 2025 18:46

சமூக விரோதிகள் பயம் போக்கியது திராவிட இயக்கம். மாநிலத்தில் என்ன கொலை, கொள்ளை, சட்ட விரோதம் நடந்தாலும் ஆளும் கட்சியை 5 ஆண்டுகள் பாதுகாப்பது நவீன கொலிஜியம் நீதிமன்றம். ஆட்சி டிஸ்மிஸ் செய்ய விசாரித்து பரிந்துரைக்க வேண்டியது நீதிமன்றம். கொலை, கொள்ளை, போராட்ட, வன்முறை பெண் மீது வன்முறை என்றால் 1 ஆண்டு சிறை கட்டாயம். தேர்தல் வாக்குரிமை குடியுரிமை நீக்கம். விடுதலைக்கு பின் புது வாக்காளர் அடையாளம். வாகன விபத்து 1 ஆண்டு சிறை கட்டாயம். ஓட்டுநர் உரிமம் குடியுரிமை ரத்து. தண்டனைக்கு பின் புது உரிமம் பெற வேண்டும். மக்கள் தொகை அதிகம். விரைவு தீர்வு தேவை.


Sivakumar
ஜூன் 09, 2025 18:19

36 கிரிமினல் வழக்குகள் உள்ள கல்வெட்டு ரவி யை பிஜேபியில் சேர்த்த அண்ணாமலை. பல கிரிமினல் வழக்குகளுக்காக ஜெயிலில் இருக்கும் மணிகண்டனின் மனைவி பத்மாவதியை பிஜேபியில் சேர்த்த அண்ணாமலையால் ரௌடிகளுக்கு பயம் போயிருக்கும். உண்மை தான்.


Padmasridharan
ஜூன் 09, 2025 16:59

பெண்களுக்கு மட்டும்தான் நடக்கிறதா இது மாதிரி. .காவலர்கள் மேல் பயமில்லாமல் இல்லை. கடற்கரை போன்ற பொது இடங்களிலிருந்து அவர்கள் மிரட்டியடித்து பணம் / பொருள் புடிங்கி, தங்கள் வண்டியில் கூட்டி அழைத்து அறைக்கு செல்கின்றனர். இதனால் புது குற்றவாளிகளை உருவாக்குகின்றனர்.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 16:41

ஏவல்துறை இயங்குவதே மிஸ்சால உள்ளேயிருந்த ஆளின் கீழ்தான். பின்னே வேறெதை எதிர் பார்க்கலாம்?


Svs Yaadum oore
ஜூன் 09, 2025 16:28

சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதல் ......காசு வாங்கி லஞ்சத்தில் இந்த காவலாளி சேர்ந்திருப்பான் ....போதை குடிகாரனாக கண்டிப்பாக இருக்கும் ..ஊரெங்கும் டாஸ்மாக் கஞ்சா மெத்து கள்ள சாராயம் பாலியல் குற்றம் ...போலீஸிடம் கிரிமினல்களுக்கு எந்த பயமும் இல்லை ....கணவர் இறந்துபோனதால் ஆதரவில்லாத அம்மா , அவர் பெண்ணை இந்த இல்லத்தில் சேர்த்துள்ளார் ..இப்பொது அந்த 13 வயது மாணவி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ...இதுதான் விடியல் சமூக நீதி ...மகா கேவலமான ஆட்சி ...