உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக மாணவி காலில் விழ வைத்து பட்டியலின மாணவிக்கு கொடுமை

சக மாணவி காலில் விழ வைத்து பட்டியலின மாணவிக்கு கொடுமை

துாத்துக்குடி: தனியார் கல்வி நிறுவனத்தில், பட்டியலின மாணவியை, சக மாணவி காலில் விழ வைத்த கொடுமை நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், 'தியான் ஹெல்த் எஜுகேஷன்' என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான கல்வி நிறுவனம் உள்ளது. டாக்டர் சிவகுமார் இதன் நிர்வாகியாகவும், கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா என்பவரும் உள்ளனர்.தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி மாலா வினோதினி, 20, உட்பட பல மாணவியர் இந்நிறுவனத்தில் படித்து வருகின்றனர். ஜன., 31ம் தேதி மாலா வினோதினிக்கும், சக மாணவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மாலா வினோதினி அந்த மாணவியை தாக்கியுள்ளார்.இதுகுறித்து, விசாரித்த கிருஷ்ணபிரியா, மாலா வினோதினியை கண்டித்ததோடு, தாக்கியுள்ளார். மேலும், சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, மாலா வினோதினி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனு:கிருஷ்ணபிரியா என்னை தாக்கியதோடு, சக மாணவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான், எனது சான்றிதழ்களை தருவதாக கூறினார். வேறு வழியின்றி அந்த மாணவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதன் பின், 1 லட்சம் ரூபாய் தந்தால் தான் சான்றிதழ்களை தருவதாக கிருஷ்ணபிரியா மிரட்டுகிறார். விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.விசாரித்த போலீசார், கிருஷ்ணபிரியா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை