உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது

கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.கோவையில் ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக இந்திரா,54, பணிபுரிந்து வருகிறார். சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோவிலில் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்த கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை. அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wqkrkqg4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐகோர்ட் அறிவுறுத்தல்இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'கோவிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்தார். அப்போது, 'கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்' என்று இந்திரா கேட்டுள்ளார்.பேரம் பேசிய உதவி கமிஷனர்'அவ்வளவு பணம் தங்களால் தர இயலாது' என்று கூறிய நிலையில், இரண்டு லட்சம் ரூபாய் தருமாறு கேட்டார். பல முறை பேரம் பேசி, கடைசியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுரேஷ்குமார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய, ரூ.1.5 லட்சத்தை, இந்திராவிடம் சுரேஷ் வழங்கினார். அப்போது மறைந்து இருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய, இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

koderumanogaran
ஜூலை 22, 2025 17:46

சாமி கொடுத்தாலும் பூசாரி தரமாட்டார்-ம்பாங்களே இதுதானா??? அறநிலையத்துறையில் இருப்பவர்களிடமும் ...அறம் இல்லை


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூலை 20, 2025 11:20

அய்யா இங்கு குறிப்பிட்டு உள்ள கோவில் தனியார் கோவில் எ‌ன்பதை யாருமே கவனிக்காமல் விட்டு விட்டீர்களே, இ‌தி‌ல் புகார் கொடுத்த நபர் இ‌ந்த கோயில் வருமானத்தில் பங்கு கே‌ட்டு கிடைக்காததால் அ‌ந்த ஆத்திரத்தில்தான் புகா‌ர் கொடுத்து இருப்பார் போல.


VSMani
ஜூலை 19, 2025 14:57

இந்த ரூ.1.5 லட்சம் லஞ்சம் யாருக்கெல்லாம் பங்கோ?


Prakash Prashanth
ஜூலை 19, 2025 11:05

முறையாக ஆள் போட்டு அர்ச்சனை டிக்கெட் தேங்காய் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா இல்லை அதை அதில் பலவாறான தவறுகள் நடக்கிறது அரசு அதிகாரிகளின் கண்பார்வையிலே அவர்கள் கொள்ளை அடிக்கும் விதம் வேறு டிக்கெட்டில் இல்லாமலே வசூலிக்கும் நிறைய கோவில்கள் உள்ளது அதில் அதிகாரிகள் நிறைய சுரண்டுகிறார்கள் இதை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும்


Prakash Prashanth
ஜூலை 19, 2025 11:01

முன்பெல்லாம் கோவிலில் ஆள் வைத்து அர்ச்சனை டிக்கெட்டுக்கு வசூல் செய்வார்கள் இப்போது வருமானம் இல்லாத கோவில்களில் கூட பல அரசு அதிகாரிகள் கோவில் தட்டுகாணிக்கையும் தேங்காய் பழம் என்ற பெயரில் புடுங்கிக் கொள்கிறார்கள் டிக்கெட்டும் கொடுப்பதில்லை தட்டில் வரும் காணிக்கைகளை எடுத்து என்னதான் செய்கிறார்களோ அவ்வளவு கேவலமான நிலை அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் இன்றைய ஈகோக்கள் அப்படி இருக்கிறார்கள்


chinnamanibalan
ஜூலை 18, 2025 21:50

அறநிலையத் துறையில் உதவி ஆணையர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி, ஒரு கோவிலை புதிதாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர, பணம் பெற்றது பெருங் கொடுமை. இவர் போன்ற அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்தால் மட்டுமே தமிழக கோவில்கள் காப்பாற்றப்படும்.


Bhaskaran
ஜூலை 18, 2025 20:19

கழுத்தில் போட்டிருக்கும்‌ வடச்சங்கிலி 15 பவுனுக்கு மேலிருக்கும் போலிருக்கு கண்டிப்பாக ஊழல்பணத்தில் வாங்கியதாகத்தான் இருக்கும்


Parthasarathy Badrinarayanan
ஜூலை 18, 2025 19:51

நிர்வாகத்தில் வரும் பெண்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்பது வேதனை. கூடிய சீக்கிரம் வேறு கோவிலில் வேலைக்கு சேருவார். அதுதான் திராவிடியா தில்லுமுல்லு மாடல்


Ram pollachi
ஜூலை 18, 2025 15:09

கோவில் பூசாரிகளுக்கு இந்த துறை அதிகாரிகள் மேல் தான் பயபக்தி அதிகம் சாமி எல்லாம் அடுத்த பட்சம்... இவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் இல்லை என்றால் சோற்றில் மண் விழுந்து விடும். இதுவரை ஒரு கோவிலையாவது கட்டி எழுப்பியது உண்டா? ஆனால் பல கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ததாக கதை விடும்... பற்பல தனியார் கோவிலை தங்கள் வலையில் வீழ்த்த பலமுனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது... ஆனாலும் துணிவுடன் நேர்மையான சட்ட நிபுணர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலுடன் போராடி வருகிறார்கள்...


Prakash Prashanth
ஜூலை 19, 2025 11:14

உண்மைதான் என்ன செய்வது பூசாரிகளின் பணத்திலும் பெரும் அளவு அதிகாரிகள் பெற்றுக் கொள்கின்றனர் .


visu
ஜூலை 18, 2025 14:52

கேட்ட இடம் தவறு இதனால் சுரேஸ் க்கு என்ன லாபம் இதே கோவில் தரப்பில் கேட்டிருந்தால் வேற விதமா இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை