உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்

பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்

திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இரு பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார் அளித்துள்ளார். சமூக நலத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் இளம்பெண் பிஎச்.டி., பட்டம் பெறுவதற்காக பதிவு செய்தார். பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பெண் உதவி பேராசிரியர் அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். மாநில பெண்கள் ஆணையத்திற்கு அவர் அளித்த புகாரை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர்.இருப்பினும் இது குறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.ஆனால் இவ்வாறு எந்த பாலியல் குற்றச்சாட்டும் நடக்கவில்லை எனவும் அவர் முறையாக வகுப்பு நடத்தாததால் அவர் மீது மாணவர்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவிப்பதாக பல்கலை தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஏப் 11, 2025 11:06

ஆணுக்கு என்ன சரிசமம் .....ஒருவர் பி ஏச் டி செய்கிறார் என்றால், அவரது இக்காட்டும் பேராசிரியரின் அடிமை. அந்த பேராசிரியரின் கருத்துக்களை வைத்துதான் ஆராய்ச்சி பல செய்து எஸ்பியரின்ட்களும் செய்து கிடைத்த தடவை வைத்து ஆய்வு கட்டுரை எழுதி சமர்ப்பிக்கவேண்டும். இதில் ஆண் என்ன பெண்ண என்ன. இங்குதான் பிரச்சினை. ஆண் மாணாக்கர்கள் பொறுமையாக இருந்து பட்டம் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் பெண் சமுதாயம் பொறுமைள்ளத்தால் பேராசிரியர்கள் மீள் அபாண்டமாக பழி சுமத்தி இரக்கம் பெறுவது ஓல் நடக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி செயல்களினால் பெண்களை ஆராய்சசிக்கு எடுப்பது இல்லை ஒரு ப்ரோப்ளேத்தை கண்டுபிடுத்து ஆய்வு செய்து ரிப்போர்ட் தயாரிப்பது லேசுப்பட்ட செயல் கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை