உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிவு: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிவு: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை: 'அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர்.,யை வெளியிட்டதால், மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று (டிச.,28) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=097c66bo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசு தரப்பில் கூறியதாவது:'நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர்., இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது. கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக எப்.ஐ.ஆர் காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகிவிட்டது.எப்.ஐ.ஆர்.,யில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூறியாக வேண்டும். போலீஸ் துறை கசியவிடவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக எப்.ஐ.ஆர்., உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. யார் எப்.ஐ.ஆர்., பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை வெளியானதால், அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 123 )

raju
டிச 30, 2024 11:55

அனால் ஏழை பெண்களுக்கு இந்த மாதிரி இழப்பீடு கொடுக்க வில்லையே . நீதி மன்றமும் இனம் பார்த்து நீதி வழங்குகிறது


தனி
டிச 29, 2024 10:03

தூக்குகயிறு அனுப்பிவையுங்கள்!! இதன்பிறகும் பதவியில் இருப்பது சூடு சுரனையற்ற ஜென்மம்!!


D.Ambujavalli
டிச 29, 2024 06:25

இப்படியே கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு என்ற வகையில் இனி பட்ஜெட்டில் ஒரு தலை Head பில் ஒதுக்கி வைக்க வேண்டும்போலிருக்கிறது நாம் என்ன அக்கிரமம் செய்தல் என்ன, கோர்ட் சொல்படி காசை, மக்கள் வரிப்பணத்தில்தான், வீசியெறிந்து, மெல்ல மெல்ல வாயை அடைத்து, கேஸை அமுக்கிவிடலாம் என்ற மிதப்பில் மென்மேலும் ஆட்டம் போடுவார்கள்


ram
டிச 29, 2024 06:05

சரியாக தனது வெலையை செய்யாத தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் சரியான சம்பட்டி அடி.. மெத்தனப்போக்காக செயல்படும் காவல்துறைக்கு இது ஒரு நல்ல பாடம்..


ram
டிச 29, 2024 06:05

காவல்துறைக்கு இது ஒரு நல்ல பாடம்..


ram
டிச 29, 2024 06:05

சரியாக தனது வேலையை செய்யாத தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் சரியான சம்பட்டி அடி.. மெத்தனப்போக்காக செயல்படும் காவல்துறைக்கு இது ஒரு நல்ல பாடம்..


Duruvesan
டிச 29, 2024 06:02

கட்டுமரம் நல்லவர் இல்லை, ஆனாலும் இவ்வளவு கேவலமா ஆட்சி செய்ய வில்லை


Duruvesan
டிச 29, 2024 06:02

கட்டுமரம் நல்லவர் இல்லை, ஆனாலும் இவ்வளவு கேவலமா ஆட்சி செய்ய வில்லை


Duruvesan
டிச 29, 2024 06:02

கட்டுமரம் நல்லவர் இல்லை, ஆனாலும் இவ்வளவு கேவலமா ஆட்சி செய்ய வில்லை


Duruvesan
டிச 29, 2024 06:02

கட்டுமரம் நல்லவர் இல்லை, ஆனாலும் இவ்வளவு கேவலமா ஆட்சி செய்ய வில்லை


புதிய வீடியோ