சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z6jd1om8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் ஒரு சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.