வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திடீர்–னு எப்படி எரியும்? தீர விசாரித்து என்ன காரணம்னு கண்டு பிடிங்க.
தீ விபத்து என்று எப்போது சொன்னார்களோ அப்போதே மின் கசிவு தான் காரணம் என்பதும் இவர்கள் கண்டு பிடிப்பு
கடலூர்: நெய்வேலி, என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில், டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதமானது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து அனல் மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் தயாரித்து தமிழகம் கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (மே 11) 2வது அனல் மின் நிலையத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
திடீர்–னு எப்படி எரியும்? தீர விசாரித்து என்ன காரணம்னு கண்டு பிடிங்க.
தீ விபத்து என்று எப்போது சொன்னார்களோ அப்போதே மின் கசிவு தான் காரணம் என்பதும் இவர்கள் கண்டு பிடிப்பு