உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீயணைப்புத்துறை துணை இயக்குனரிடம் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

தீயணைப்புத்துறை துணை இயக்குனரிடம் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதுதிருநெல்வேலி மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியில் தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது இத்துணை இயக்குநர் அலுவலகத்தின் பொறுப்பாகும். இதில் முறைகேடு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையின் கூடுதல் எஸ்.பி. எஸ்கால் தலைமையில் குழு திடீர் சோதனை மேற்கொண்டது.சோதனையின் போது, துணை இயக்குநர் சரவணபாபு அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிர்ப்புற அலமாரியில் உள்ள பைல்களுக்குள் 6 கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2,24,100 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், துணை இயக்குநரின் டிரைவராக பணிபுரியும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் வசம் ரூ.27,400 ரொக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தப் பணத்துக்கு அலுவலர்களால் எந்த கணக்கும் சொல்ல முடியவில்லை. மொத்தம் ரூ.2,55,500 லஞ்சத் தொகை என சந்தேகிக்கப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்புடையவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Perumal Pillai
நவ 18, 2025 21:05

Savukku Sankar's YouTube exposé revealed the extent of the department's obnoxious corruption, a reality that remains largely unknown to ordinary people.


xxxx
நவ 18, 2025 18:42

தீ அணைக்க வந்தாலே செலவுக்கு பணம் தரணும் . கரண்ட் சரி பண்ண பணம் தரணும் காம்ப்லின்ட் குடுத்த பணம் தரணும். பிணவறை வரை பணம் தரணும் ... நல்ல நாடு ....


xxxx
நவ 18, 2025 18:35

இதெல்லாம் என்ன பிரமாதம் இன்னும் ஸ்பெஷல் நிறைய இருக்கு .... வடிவேல் காமெடி லேயே சொல்லிடறே


duruvasar
நவ 18, 2025 16:53

பெயரை பார்த்தாலே பிடிபட்டவர்கள் மர்ம நபர்கள் இல்லை என்பது டthelivaagivittadhu.


சிந்தனை
நவ 18, 2025 16:35

நல்ல படிச்சவன் நல்ல திருடன்... கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் இயங்கிய கல்வித்திட்டம் நம்ம பிள்ளைகளை திருடர்களாக ஆக்கவும் பண்பு அற்றவர்களாக ஆக்கவும் தான் நாம் பள்ளிக்கூடம் கல்லூரிக்கு அனுப்புகிறோம் கவனிக்க வேண்டும்...


Govi
நவ 18, 2025 16:27

மிகவும் குறைந்த தொகை இது போயி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை