உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது.மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் வந்தது. சென்னையில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் புகை வெளியேறியது. இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தக்க நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.விமானத்தில் இருந்து லேசான புகை வந்தது உண்மைதான் என்றும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Shankar
ஆக 12, 2025 14:02

You are the only person ask right question. No matter Air india or Malasia. Indian and international news are thieves- they always hiding the " Origin Of Aircraft ". So we dont want to care the happening flight accident.


Ramesh Sargam
ஆக 12, 2025 12:08

இது சரக்கு விமானம். ஆனால் தினம் தினம் பயணியர் விமானத்தில் கூட தொடர்ந்து பிரச்சினை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும். தயாரிப்பில் பிரச்சினையோ? கண்டறிந்து சீர்படுத்தவேண்டும்.


Rajan A
ஆக 12, 2025 12:01

உள்ளே என்ன "சரக்கு" இருந்ததோ?


SANKAR
ஆக 12, 2025 11:30

which airlines is this?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை