ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வலையில் பாறை, தோலன் மீன்கள் ஏராளமாக சிக்கியதால் விலை வீழ்ச்சியடைந்தது.பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பிய பெரும்பாலான மீனவர்களின் வலையில் பாறை, தோலன், மாஊழா, ரோமியோ, சீலா ஆகிய மீன்கள் ஏராளமாக சிக்கின.இவை ரகத்திற்கு ஏற்ப கிலா ரூ.110 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது. விலை வீழ்ச்சியடைந்து எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருப்பதால் விலை குறைந்தது. அதன்பின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.