உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார் ஓட்டுனர் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பினர்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார் ஓட்டுனர் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பினர்

சென்னை : சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் மரியதாஸ், 47; டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டுகிறார்.சோழிங்கநல்லுாரை சேர்ந்த விக்னேஷ், 45, அவரது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வெளியூருக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார். சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல நேற்று வாடகை கார் வரவழைத்தார். மரியதாஸ் ஓட்டி வந்த காரில், விக்னேஷ் மற்றும்குடும்பத்தினர் நான்கு பேரும் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு, ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சிக்னல் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலை உள்வாங்கி திடீரென ராட்சத பள்ளம் விழுந்தது.ஓட்டுனர் மரியதாஸ் சுதாரிப்பதற்குள், பள்ளத்தில் கார் குப்புற கவிழ்ந்து சிக்கியது. அவ்வழியே சென்றோர் இதை பார்த்து, காரினுள் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டு, வெளியே கொண்டு வந்தனர்.இதில் ஓட்டுநர் மரியதாஸுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேருக்கும் காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாலை உள்வாங்கி ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து சில அடி துாரத்தில், மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியின் அழுத்தம் காரணமாக, பள்ளம் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், பள்ளம் விழுந்த காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
மே 19, 2025 17:16

இதற்கு யார் பொறுப்பாவது? சாலைபாதுகாப்பு எப்படி உள்ளது? நஷ்ட ஈடு யார் கொடுப்பது? எல்லோரும் பார்வையாரராகவே இருக்க முடியாது............


rasaa
மே 19, 2025 14:06

மரியதாஸ் என்ற பெயர் சாலைக்கு பிடிக்கவில்லை. ஆகவேதான் சாலையை பள்ளமாக்கி அவரை குப்புற விழச்செய்தது. கேஸ் முடிவடைந்தது.


S. Neelakanta Pillai
மே 18, 2025 14:19

உயிர் சேதம் இல்லை நல்லது. ஆனால் கார் பழுதாகி உள்ளது அதற்கு நஷ்ட ஈடு யார் வழங்குவார்கள். அவருடைய வாழ்வாதாரமே இந்த கார் தான் எனவே அரசு உடனடியாக அந்த காருக்கு உண்டான செலவையோ அல்லது புது வாகனத்தையோ காலதாமதம் இல்லாமல் உடனடியாக விரைவாக சம்பந்தப்பட்டவருக்கு வழங்க வேண்டும். இந்தப் பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதற்கான ஆய்வு, புலன் விசாரணை, புவியியல் அகழ்வாராய்ச்சி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அரசு நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளட்டும். இவர்கள் தூங்குமூஞ்சி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கு அதுவரை சாமானியன் பொறுத்துக் கொள்ள முடியாது அவன் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிடும் எனவே பூமிக்குள் என்னை இருந்தாலும் அரசுக்கு சொந்தம் தானே அப்படி என்றால் இந்த இந்த பூமியில் பள்ளம் விழுந்து விபத்து ஏற்பட்டதற்கும் நேரடியாக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் ஆனால் என்ன துரதிருஷ்டம் பாருங்கள் இந்த விஷயத்தில் செய்தியை மட்டும் வெளியிட்டு விட்டு பத்திரிகைகளும் சரி மீடியாவும் சரி அரசும் சரி வாய் மூடி மௌனியாக கள்ள மவுனம் காப்பது என்பது அயோக்கியத்தனம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.


subramanian
மே 19, 2025 17:23

உண்மை


ديفيد رافائيل
மே 18, 2025 09:05

நல்லவேளையாக bike ல் போனவங்க யாரும் சிக்கவில்லை


chennai sivakumar
மே 18, 2025 08:41

அவர்கள் ஊருக்கு போனார்களா இல்லையா??


V RAMASWAMY
மே 18, 2025 08:13

கண்டிப்பாக அவசர விசாரணை செய்யவேண்டிய நிகழ்வு, மனிதக்குற்றமா, இயற்கை விளைவா? மனிதக்குற்றமென்றால் கான்ட்ராக்ட்டர் முதல் தொடர்புடைய மற்ற அனைவரும் அவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.


ديفيد رافائيل
மே 18, 2025 09:07

மனித தவறு தான்.


N Annamalai
மே 18, 2025 05:14

காரணம் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த பள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறக்கும் வேகத்துடன் செயல் பட வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 18, 2025 09:50

Roads were laid without proper compaction of underburden which is the only reason. Added to this woe, water seepage erode the soil and causing cavities


புதிய வீடியோ