உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடிக்கம்பம், விளம்பர பேனர் விவகாரம்: கோர்ட் உத்தரவை மதிக்காத அரசியல் கட்சியினர்

கொடிக்கம்பம், விளம்பர பேனர் விவகாரம்: கோர்ட் உத்தரவை மதிக்காத அரசியல் கட்சியினர்

சென்னை: பொது இடங்களில் கொடிக்கம்பம் அமைப்பதிலும், பிளக்ஸ் பேனர் அமைப்பதிலும் கோர்ட் உத்தரவுகளை அரசியல் கட்சியினர் மதிப்பதே இல்லை என்பது தான் கண்கூடான உண்மை. இது பற்றி தினமலர் வாசகர் ஆர்.சுகுமாறன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை அப்பாவி பொதுமக்களை தவிர, அரசியல் கட்சியினரோ, வியாபாரிகளோ கொஞ்சமும் மதிப்பதும் இல்லை; அவற்றை பொருட்படுத்துவதும் இல்லை என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் உணர முடியும். மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே, அ.தி.மு.க., கொடிக் கம்பம் நட அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி, அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, 12 வாரங்களுக்கு பின், அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின், எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கவனித்து பாருங்கள்... ஒரு கொடிக்கம்பம் கூட அகற்றப்பட்டிருக்காது!சென்னையில், பிராட்வே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் பகுதி பிளாட்பாரங்களில், கடை வைக்க கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அப்பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த பலகைக்கு கீழ், கோவிந்தப்ப நாயக்கன் தெரு முனையில் இருந்து, பிரகாசம் சாலை சந்திப்பு வரை பிளாட்பாரத்தில் கடைகளை பரப்பி, இன்றும் வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர், வியாபாரிகள்.அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்கள், வாகன ஓட்டிகள் மீது சரிந்து விழுந்து, உயிரிழப்பு நேரிடும்போது, பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அதை, எந்த அரசியல் கட்சியும் மதிப்பது இல்லை; 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்ற அகம்பாவத்தில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சாலைகளில் கூட பேனர்கள் வைக்கின்றனர்.அரசியல் கட்சியினர் மட்டுமல்ல; விளம்பர நிறுவனங்களும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகை வைக்கக் கூடாது என்று, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், விளம்பர பேனர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, குறையவில்லை. நீதிமன்ற உத்தரவின் மீது அவ்வளவு மரியாதை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oru Indiyan
ஜன 29, 2025 18:55

பல நீதிபதிகள் பல காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே திராவிட கட்சிகளின் தலையாட்டி பொம்மைகள்.


Anantharaman Srinivasan
ஜன 29, 2025 14:15

அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயே தான் உலா வரும்.


GMM
ஜன 29, 2025 14:10

குற்ற நடவடிக்கையில் நீதிமன்ற உத்தரவை அரசு கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் , சிவில் நடவடிக்கையில் நீதிமன்றம் ஒரு - Executive Authority - கிடையாது . பல காலமாக தவறான நடைமுறை பின் பற்ற பட்டு வருகிறது. நீதிமன்றம் நகராட்சி ஆணையர், சாலை பொறியாளர் போன்ற அரசு பொறுப்பு அதிகாரிகளுக்கு தான் அமுல்படுத்த உத்தரவிட முடியும்.


Kasimani Baskaran
ஜன 29, 2025 13:11

அவர்கள் போட்ட பிச்சையில் படித்து நீதிபதியானவர்கள் என்ன சொன்னாலும் திராவிடக்கட்சிகள் குறிப்பாக திம்க்கா கவலைப்படாது.


Ray
ஜன 29, 2025 12:45

நம்ம கொடிய நாட்டமுடியவில்லையே என்ற வைத்தெரிச்சல்தான்


அப்பாவி
ஜன 29, 2025 12:39

கோர்ட் உத்தரவை அமல் படுத்த ராணுவத்தின் உதவியை நாடலாம். எவனாவது எதிர்த்தால் காலிலேயே சுடலாம்.


Balamurugan
ஜன 29, 2025 12:34

நீதிமன்றங்கள் எதுக்கு இருக்கே என்றே தெரியவில்லை. கொடிக்கம்பங்களை அகற்ற 12 மணி நேரம் கால அவகாசம் பத்தாதா? 12 மணி நேரத்திற்குள் கொடிக்கம்பங்கள் பேனர்களை அகற்றாத கட்சிகளின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று சொல்லி பாருங்கள்.


Ramesh Sargam
ஜன 29, 2025 12:06

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சி தலைவர்களை நீதிமன்றம் ஏன் தண்டிப்பதில்லை? பயமா? பயம் என்றால், பிறகு நீதிமன்றங்கள் எதற்கு?


கூமூட்டை
ஜன 29, 2025 12:03

வணக்கம் பல கோர்ட் சட்டம் எல்லாம் ஏழைகளுக்கு மற்றும் நடுத்தர மக்களும். ஊழல்வாதி தக்காளிகளுக்கு கிடையாது என்று பல ஆண்டுகளாக நிருபித்த செய்திகள் உள்ளன. எல்லாம் வல்ல இறைவன் மக்களைக் காப்பாற்ற வேண்டும்


சமீபத்திய செய்தி