உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு

ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு

அவிநாசி: ''என் மகள் தற்கொலை வழக்கு விசாரணை மிக மெதுவாக நடைபெறுகிறது. சிறையில் இருக்கும் கவின்குமார், ஈஸ்வரமூர்த்திக்கு வெளியே இருந்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. என் மகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன்,'' என ரிதன்யாவின் தாய் ஆவேசத்துடன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி - கைகாட்டிப்புதுார் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 53, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரின் மனைவி ஜெயசுதா, 42. தம்பதியின் மகள் ரிதன்யாவுக்கும், 27, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணனின் பேரனான ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார், 28, என்பவருக்கும், ஏப்., 11ல் திருமணம் நடைபெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ab5o4ydv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த நிலையில், கடந்த, 28ம் தேதி சேவூர் அருகே காரில் சென்ற ரிதன்யா, தன் தந்தை அண்ணாதுரைக்கு, எட்டு ஆடியோ தகவலை, 'வாட்ஸாப்'பில் அனுப்பி விட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இவர்களில், சித்ராதேவியை தவிர, மற்ற இருவரை கைது செய்து, திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சித்ராதேவி தனது உடல்நிலையை காரணம் காட்டி, 'பைண்டிங் ஆப்' என்ற முறையில், பல நிபந்தனை விதித்து, போலீசார் கைது செய்யாமல் அவரை விடுவித்தனர்.இதற்கிடையே, ரிதன்யா வழக்கில், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., தலைவராக உள்ள கவின்குமாரின் தாத்தா கிருஷ்ணன் உள்ளதால், ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்து, வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக கூறி, நேற்று முன்தினம் சேலத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை சந்தித்து, சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு அளித்தனர்.

பின், அவர் அளித்த பேட்டி:

ரிதன்யா ஒரே பெண் என்று செல்லமாக வளர்த்தோம். அதனால், கவின்குமார் குடும்பத்தை நல்ல பாரம்பரியமான குடும்பம் என நம்பி, கோடி கணக்கில் நகை, கார் என பணம் செலவழித்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால், சைக்கோ போல கவின்குமார் ரிதன்யாவை துன்புறுத்தியுள்ளார்.அவருக்கு வாடகை பணம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்து வந்துள்ளார். இதன் காரணமாகவே, என் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக 'டார்ச்சர்' செய்துள்ளார்.அதனால் ஏற்பட்ட காயங்களை மாமியார் சித்ராதேவியிடம், எனது மகள் காட்டிய போது, தன் மகனை கண்டிக்காமல், 'என் மகன் அப்படித்தான்... அனுசரித்துப் போ' என கூறியுள்ளார்.திருமணம் முடிந்து இரண்டு வாரங்களிலேயே தொழில் துவங்க எங்களிடம் பணம் கேட்டனர். ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தோம். இதனால் ரிதன்யாவை திருப்பி எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம். அதற்குள் தற்கொலை செய்து கொண்டாள்.என் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் மகள் தற்கொலை வழக்கு மிக மெதுவாக நடைபெறுகிறது. தற்போது வரை சிறையில் இருக்கும் கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்திக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. என் மகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.ரிதன்யாவின் தாய் ஜெயசுதா கூறிய குற்றச்சாட்டு குறித்து, கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, ''சிறையில் உள்ளவர்களுக்கு வெளியில் இருந்து சாப்பாடு வந்திருக்க வாய்ப்பில்லை. இது தவறான தகவல்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sasidharan
ஜூலை 08, 2025 09:38

அரசியல் பின்புலத்தில் குற்றவாளிகள் யாரும் வெளியே வரக்கூடாது . அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் . போனது ஒரு அப்பாவி உயிர்.


Mecca Shivan
ஜூலை 07, 2025 09:12

இல்லாத கீழ்சாதியினரும் மற்றவர்களும் இப்படி கொலைகளில் தற்கொலைக்கு தூண்டுதலில் ஈடுபடுவது என்பது இல்லையென்றே சொல்லலாம் ..


lakshmi mani
ஜூலை 06, 2025 14:16

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அப்போதுதான் மறுபடியும் இந்த மாதிரியான குற்றங்கள் தவிர்க்கப்படும்


Dinesh Pandian
ஜூலை 06, 2025 10:30

பெண் இறந்து போனதுதான் பாவம் . இந்த ஏரியா ல பெட்டி பணம் என்ற பெயரில் வரதட்சணை பணம் தரும் வழக்கம் உள்ளது , அந்த மாப்பிளைக்கு பொண்ணு தர இன்னொரு தந்தை தயாராக இருப்பார் . இவர்கள் தப்பி விடுவார்கள்


Lakshmanan
ஜூலை 05, 2025 14:21

சொந்தத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுத்து இருந்தால் இவ்வாறு நடக்குமா? பையனோ பொண்ணோ சரியாக விசாரிக்காமல் விட்டால் இதுதான் நிலைமை....


KRISHNAN R
ஜூலை 04, 2025 17:04

ரியல் எஸ்டேட் தொழில்.... அரசியல்... எந்த முன்வினை என்று தெரியவில்லை... அப்பாவி பெண்.


sasikumaren
ஜூலை 03, 2025 22:47

இந்த நிஜத்தை அறியும் போது மனம் மிகவும் கவலை படுகிறது காரணம் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் அவள் நிலையை நினைத்தால் என்ன ஆகுமோ என்ற பயம் வருகிறது


Vijay D Ratnam
ஜூலை 03, 2025 22:22

பொண்ணு தற்கொலை செஞ்சிக்கிச்சி. அவள் தற்கொலைக்கு காரணம் நாங்கள் அல்ல என்று வெளியே வந்துவிடுவார்கள். செல்வந்தர்களான பொண்ணோட பெற்றோர்கள் தங்கள் அன்பு மகளுக்கு 300 பவுன் தங்கம் 80 லட்ச ரூவா மதிப்புள்ள வோல்வோ கார், இதுக்கு மேல கோடிகளில் செலவு செய்து கல்யாணம் செஞ்சி வச்சிருக்காங்கன்னா அந்த மாப்பிள்ளை குடும்பம் லேசுப்பட்ட குடும்பமாவா இருக்கும். ஜெயிலில் சாப்பாடு வெளியே இருந்து வருவதெல்லாம் ஒரு மேட்டரா. வீட்டுக்கே வந்து விருந்து சாப்பிடத்தான் போறாங்க. அவிங்க என்ன திருபுவனம் கோவில் வாட்ச்மேன் அஜித்குமாரா, பிறப்புறுப்பில் ரத்தம் வரும் அளவுக்கு ஜட்டியோட அமரவைத்து இரும்புக்கம்பியால் அடிப்பதற்கு. இவர்கள் கோடீஸ்வரர்கள், அதிலும் அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்றவர்கள். அவர்கள் வீடே நூறு கோடி ரூவா இருக்கும் போல. அவர்களுக்கு தெரியும் எங்கே எலும்புத்துண்டு போடணும், எங்கே பொறை பிஸ்கட் போடணும் எங்கே லெக் பீஸ் போடணும்னு. பாவம் அந்த மகள் ரிதன்யா. பாவம் பெண்ணின் பெற்றோர். கோர்ட் கேஸ், போலீஸ், மீடியா, நியாயம் நீதி என்று ஆவாத கதைக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆமாம் எல்லோரும் கூலிப்படையை நாடுவார்களா என்ன. ரிதன்யா ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். தெய்வம் நின்று கொல்லுதான்னு பாப்போம் . .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர் sgkrishnan1970@gmail.com
ஜூலை 03, 2025 19:52

தவறான தகவல்னு உறுதி செய்தது யாருங்க... சிறை எஸ் பி செந்தில்குமார்..... அவரா.....அவர் அரிச்சந்திரனோட வம்சம் ஆச்சே.....அப்போ கரைட்டா தான் இருக்கும்....!!!


Natchimuthu Chithiraisamy
ஜூலை 03, 2025 13:03

அரசயல் குடும்பமும் அப்படிதான் இருக்கும் என்பதை மக்கள் புரிகிறார்களோ என்னவோ செய்திகள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். கிருஷ்ணன் பேரனோ இல்லை பேரன் பையனோ என்பது தெரியவில்லை கிருஸ்ணன்னை மக்களுக்கு கொஞ்சம் தெரியும் பணம் மாதம் 20 லட்சம் வாடகை அதன் சொத்து மதிப்பு எவ்வளவு. அவர் என்ன பெரிய போஸ்டில் இருந்தார் எவ்வளவு கொள்ளை அடித்தார் என்று பார்த்து கொள்ளுங்கள். சட்டம் எதாவது கொடுத்துவிடுமா கொடுத்துவிடுமா கொடுக்காது லஞ்சம் பெற்று காப்பாற்றும் அதிகாரிகள் கோடியில் கேளுங்கள் அப்பதான் அந்த சொத்தவுது குறையும் கொலை நடக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை