உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடிக்கையாளர் திட்டியதால் உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை

வாடிக்கையாளர் திட்டியதால் உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை

கொளத்துார்: கொளத்துாரைச் சேர்ந்தவர் பவித்ரன், 19; கல்லுாரி மாணவர். இவர், 'ஆன்லைன்' உணவு டெலிவரி நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார்.கடந்த 11ம் தேதி, கொரட்டூர், ஏ.வி.எஸ்., பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நிஷா என்பவர் 'ஆர்டர்' செய்த மளிகை பொருட்களை கொடுப்பதற்காக சென்றுள்ளார்.செயலியில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு நிஷா, 'மேப் லோக்கேஷன்' தவறாக காண்பிக்கிறது எனக்கூறி அருகே உள்ள தன் வீட்டின் முகவரி கொடுத்துள்ளார்.ஆனால், பவித்ரன், 'அங்கு வரமுடியாது; நீங்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லுங்கள்' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நிஷா இது குறித்து உணவு டெலிவரி நிறுவனத்தில் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நிறுவனம் பவித்ரனை வேலையை விட்டு நீக்கியுள்ளது.இந்த நிலையில், கடந்த 13ம் தேதி நிஷாவின் வீட்டிற்கு சென்ற பவித்ரன், ஜன்னல் கண்ணாடியை கல் வீசி உடைத்ததாக, கொரட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பவித்ரனை விசாரித்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். இதனால் விரக்தியடைந்த பவித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Abu Nowfal
டிச 31, 2024 00:19

ப்ரோ நானும் ஸ்விக்கில ஒர்க் பன்றவன்தான்.அட்ரஸ் மாறுதுனா அது சம்மந்தமா கஸ்டமர் கேருக்கு தகவல் சொல்லனும்.புது அட்ரஸ் 2 கிலோமீட்டருக்குள்ள இருந்தா போய் டெலிவரி பன்னனும்.போக கூடிய எக்ஸ்டரா கிலோ மீட்டருக்கான தொகையை ஸ்விக்கி தரும்.இவன் பன்னது தவறான செயல்தான்.


Anantharaman Srinivasan
செப் 19, 2024 12:30

ஆடர் செய்த பொருட்களை கொடுக்க சரியான விசாலசத்துக்கு வர மறுத்தவன் புகார் கொடுத்தவுடன் அதே வீட்டுக்கு சென்று கல்வீசி கண்ணாடியை உடைத்தவன் திமிர் பிடித்தவன். அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான்.


vikram
செப் 19, 2024 11:10

இவன் ஃபியூச்சர் ரௌடி


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 09:48

தவற்றை இவன்மீது வைத்துக்கொண்டு ...........


Oru Indiyan
செப் 19, 2024 08:54

இந்த இறப்பிற்கு காரணம் அந்த பெண் , பணியை விட்டு நீக்கிய ஸ்விக்கி, ஸ்விக்கி வரைபடம் மேப் தயாரித்த மென்பொருள் ஊழியர்கள். ஒரு இளைஞன் சாதனையை புதைத்த சமுதாயம் திருந்த வேண்டும்.


Shekar
செப் 19, 2024 09:39

இப்படிப்பட்ட கோழைகள் என்றும் முன்னேறப்போவதில்லை. கடமையை சரிவர செய்ய தவறிவிட்டான். உயர்ந்த பதவியில் இருப்போர்களை கேட்டுப்பாருங்கள் எத்தனை அவமானங்களை கடந்து வந்துள்ளனர் என்று. customer satisfaction என்பது ஒரு தொழிலின் தாரக மந்திரம் அதுவே இவனுக்கு தெரியவில்லை, உயிரை மாய்த்து கொண்டானாம். இவனைப்போல் எல்லோரும் செய்தால் இந்திய ஜனத்தொகை பாதிக்கும் கிழே போய்விடும். சவால்களை சந்திக்க திராணியற்ற கோழை.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 09:59

ஒரு தனியார் நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றியிருந்தால் உங்களது இந்தக்கருத்துக்கு நேர்மாறான கருத்தைப்பதிவு செய்திருப்பீர்கள் ....


VENKATASUBRAMANIAN
செப் 19, 2024 08:23

இப்போது உள்ள இளைஞர்கள் மனதைரியம் இல்லாமல் உள்ளனர். இதற்கு நிறுவனங்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.


சிவம்
செப் 19, 2024 07:10

மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. வாடிக்கையாளரிடம் பணிவாக பேச வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுறுத்தி இருந்தாலும், சோர்வின் காரணமாக அந்த சிறு வயது இளைஞன் கோபமாக பேசியிருக்கலாம். படித்து கொண்டு பகுதி உழியம் செய்யும் ஒருவரை உடனே வேலை விட்டு நீங்கியது அந்த நிறுவனம் செய்த தவறு. அந்த இளைஞன் அவசரப்பட்டு இந்த முடிவுக்கு வந்தது அதைவிட தவறு. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், தினந்தோறும் தங்கள் உயிரை பணயம் வைத்து டெலிவரி செய்யும் நபர்கள் மீது சிறிது கருணை காட்டவேண்டும்.


Barakat Ali
செப் 19, 2024 12:52

வாடிக்கையாளரை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை என்று நினைப்பவைதான் தனியார் நிறுவனங்கள் .... அவர்கள் பார்வையில் இவன் செய்தது மன்னிக்க முடியாத தவறு ......


முக்கிய வீடியோ