உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுாருக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து வந்தனர்.மேட்டுப்பாளையம்- குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், 'இங்கிலாந்தை சேர்ந்த, 12 பேர்; ஆஸ்திரேலியாவில் இருந்து இருவர்,' என, 14 சுற்றுலா பயணிகள், 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி நேற்று, மேட்டுப்பாளையம்- குன்னுார் வரை மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து வந்தனர். அவர்கள், நேற்று காலை, ஹில்குரோவ், ரன்னிமேடு மலை ரயில் நிலையங்களில் இறங்கி அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்து, ஆங்கிலேயர்கள் அமைத்த பாலங்கள் மற்றும் குகைகளில் மலை ரயில் செல்வதை 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த பாலங்களில் நடந்து சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்த, 'டில்லி டிராவல் பால்ஸ்' இந்தியா நிறுவன இயக்குனர் அமீத் சோப்ரா கூறுகையில்,''ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த, என்.எம்.ஆர்., என அழைக்கப்படும், நீலகிரி மவுண்டன் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர்கள் வந்தனர். இதற்காக, மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை, 6 லட்சம் ரூபாய் செலுத்தி ரயிலை எடுத்து வந்துள்ளோம். இந்த கட்டணத்தை குறைந்தால் மேலும் பல சுற்றுலா பயணிகளை அழைத்து வர வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

விவசாயி
டிச 02, 2024 10:20

வெளிநாட்டு காரர்களுக்கு வாடகைக்கு விட்டால் அன்றைய தினம் நமது நாட்டு மக்களுக்கு எதுவும் மாற்று ரயில் ஏற்பாடு செய்து கொடுத்தார்களா என்ற விபரம் இல்லையா?


Krish
டிச 02, 2024 10:17

இங்கு கருத்து சொன்னவர்கள், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருக்கிறது. காங்கிரஸ் கால அட்சி இருந்து.


அப்பாவி
டிச 02, 2024 09:16

வெளிநாட்டு பணக்காரர்களுக்கு வாடகை ரயில். உள்நாட்டு பணக்காரர்களுக்கு வந்தே பாரத் ரயில். நாம்தான் வல்லரசு.


Neel Sansu
டிச 02, 2024 07:31

இதைத்தான் ஒரு எம். பி, ரயில்வே நிர்வாகம் மலை ரெயிலை தனியாருக்கு விற்று விட்டது என்று முன்னர் கூறினார். இப்போது என்ன சொல்லப்பபோகிறாரோ தெரியவில்லை


SJ
டிச 02, 2024 03:24

This is a national shame, not news. Relevant government bodies and officials should be punished for making mockery of Indian citizens, denying the ordinary Indian citizens the journey


முக்கிய வீடியோ