உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்... கொதிப்பு! அ.தி.மு.க.,வில் இணையும் முயற்சி பலிக்காததால் தவிப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்... கொதிப்பு! அ.தி.மு.க.,வில் இணையும் முயற்சி பலிக்காததால் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'மதுரையில் வரும் 4ம் தேதி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் மாநில மாநாடு நடக்கும்' என, அதன் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டை ஒத்தி வைப்பதாக நேற்று அவர் தெரிவித்ததால், அவரின் ஆதரவாளர்களும், அவரை நம்பியுள்ள அ.தி.மு.க., தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன், அ.தி.மு.க.,வில் மீண்டும் இணையும் பன்னீர்செல்வத்தின் முயற்சி பலன் அளிக்காததாலும், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடமே நேரடியாக சரணடைந்து, தங்களை இணைத்து கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்ட போட்டியை தொடர்ந்து, பொதுக்குழுவை கூட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கியதுடன், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலரானார். இதையடுத்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' என்ற பெயரில், தன் ஆதரவாளர்களுடன் தனித்து இயங்கி வருகிறார் பன்னீர்செல்வம். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பி வரும் பன்னீர், அதற்காக சட்ட ரீதியில் அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்தும் வருகிறார்.

பிரிந்து சென்றது

ஆனால், அதை கண்டுகொள்ளாத பழனிசாமி, 'பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா உள்ளிட்டோரை எக்காரணம் கொண்டும், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைக்க மாட்டோம்' என, தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., பிரிந்து சென்றது. இந்நிலையில், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ., பக்கம் சென்றார் பன்னீர்செல்வம். ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வத்துக்கு 'சீட்' ஒதுக்கப்பட, பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், 'மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் நம்பினர். ஆனால், பழனிசாமி தன் முடிவில் உறுதியாக இருந்தார்; அது மட்டுமின்றி, பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து விட்டார். இதனால், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. அவர் குறித்து பா.ஜ., எந்த முடிவும் அறிவிக்காத நிலையில், 'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன், ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கினர்.

கடும் கோபம்

இதையடுத்து, கடந்த ஜூலையில் சென்னையில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை பன்னீர் கூட்டினார். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, தன் செல்வாக்கை காட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், வரும் 4ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார். இந்நிலையில், வரும் 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாட்டை ஒத்தி வைப்பதாக பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார். அவரின் அறிவிப்பு, ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: பன்னீரின் ஆதரவாளர்களாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டு விட்டதால், அவரோடு இணைந்தே கட்சியை ஒருங்கிணைக்கலாம் என்ற நம்பிக்கையில், அவர் பின்னால் தொடர்ந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையிலும் அவர் உறுதியாக இல்லை; அறிவிக்கப்பட்ட மாநாட்டையும், எவ்வித காரணமும் சொல்லாமல் ஒத்தி வைத்திருக்கிறார். ஒத்தி வைப்பதும், ரத்து செய்வதும் ஒன்று தான். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தகவலும் இல்லை. எந்த முடிவையும் உறுதியாக எடுக்காமல் காலம் கடத்துவது, எங்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதனால், அ.தி.மு.க.,வில் நேரடியாக இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பழனிசாமியை சந்திக்கவும் தீர்மானித்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Tamilan
செப் 01, 2025 22:27

பாஜ கூட்டாளிகள் கனவுகள் பல கண்டுகொண்டே இருக்கவேண்டியதுதான்


Vijay D Ratnam
செப் 01, 2025 20:36

ஓ.பன்னீர் செல்வம், அவரு மவனோட வாரிசு அரசியலுக்கு புகழ்பெற்ற திமுகவில் போய் இணைத்து கொள்ளலாம். செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, ரகுபதி, சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் போல் திமுகவில் செட்டிலாகி கொள்ளலாம்.


Abdul Rahim
செப் 01, 2025 11:06

எடப்பாடி கட்சி தலைமை பொறுப்பில் முந்தி கொண்டார்.


அழகு / ALAGU
செப் 01, 2025 10:07

அ.இ.அ.தி.மு.க அப்பழுக்கற்ற தொண்டர்களால் தான் வளர்ந்துள்ளது. இனியும் வளரும் எனவே புரட்சி தலைவர் மற்றும் தலைவி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ஒன்றினைந்து வெற்றி பெற பாடுபட வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 09:44

2026 ல ஆட்சியை அதிமுக பிடிக்கலைன்னா 2030 ல தன்னை அதிமுக காரன் ன்னு சொல்லிக்க ஒருத்தனும் இருக்க மாட்டான் .....


AMMAN EARTH MOVERS
செப் 01, 2025 09:17

பாஜக வை நம்பி போனால் நடுத்தெருவுலதான் நிக்கணும் இப்போவது பன்னீருக்கு புத்தி வரட்டும்


BHARATH
செப் 01, 2025 11:31

தம்பி கட்சி யார்கிட்டே இருக்கு அது முக்கியம். பன்னீருக்கு அதை தக்க வெச்சுக்க தெரியவில்லை.


Tamilan
செப் 01, 2025 08:55

கொள்ளையடிக்க சிறந்த இடம் இந்து மதவாத கும்பல் உள்ள இடம் நோக்கி செல்கிறார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 09:25

கொள்ளையடிக்க சிறந்த இடம் திராவிட மாடல் தான். இந்த திராவிட மாடல் தான் இந்துக்களின் கோவில் இருந்து கொள்ளை அடிக்கிறது. இந்து கோவில்களில் இருந்து கொள்ளை அடிக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருச்செந்தூர் கும்பாபிஷேகம். இதில் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செய்த திருப்பணிகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாக்கடை நீர் செல்லும் படி செய்துள்ளது. கொள்ளையடிக்க சிறந்த இடம் இந்து மதவாத கும்பல் உள்ள இடம் தான் என்று திராவிட மாடலுக்கு நன்கு தெரியும்.


Muralidharan S
செப் 01, 2025 10:16

தமிழன், தமிழ் என்று சொல்லி சொல்லியே வெறும் மஞ்சப்பையுடன் வந்தவன் எல்லாம் தமிழகத்தேயே கூறு போட்டு விற்றது உங்க திராவிஷமும்தானே.. 60 ஆண்டு நாற்றமடித்த திராவிஷ குப்பைகளை கிளறிப்பார.. நன்றாக இருந்த கூவத்தை சாக்கிடையாக மாற்றி நாறடித்தது, அதை சுத்தம் செய்கிறேன் என்று 60 ஆண்டுகளாக கோடி கோடியாக அதற்க்கு கணக்கு எழுதி சுருட்டுகிறது திராவிஷம்.. அப்படித்தான் நன்றாக இருந்த தமிழகமும் திராவிஷத்தால் நாறுகிறது 60 ஆண்டுகளாக... இதை எல்லாம் மக்களிடம் இருந்து மறைக்க நீ பயன்படுத்தும் வாய் ஜாலம்தான், தமிழ்.. தமிழன்... ஹிந்தி ஒழிப்பு, மதவாதம் என்ற போர்வையில் சிறுபான்மையினரை தூண்டிவிட்டு குளிர்காய்வது.


Anand
செப் 01, 2025 11:12

போலி பெயரில் ஊளையிடுது.


V RAMASWAMY
செப் 01, 2025 14:37

பா ஜ க ஆட்சிக்கு வந்ததும் எவ்வித மதவாத மனவருத்தமோ பெரும் சண்டைகளையோ வந்ததில்லை அன்பரே. மதவாதம் என்பது சமூக நீதி சமத்துவம் என்கிற போர்வைக்குள் மட்டும் மறைந்திருக்கும் விஷம்.


venkat
செப் 01, 2025 08:37

இவர்களுக்கு கொள்ளையடிக்க நன்கு பசையுள்ள ஒரு கட்சி தேவை


D Natarajan
செப் 01, 2025 08:22

நல்ல முடிவு


Vasan
செப் 01, 2025 07:30

Sasikala has invited those who have been expelled from AIADMK and those who have distanced themselves from AIADMK to come back to united AIADMK. This might be the reason for OPS to cancel the Madurai conference.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை