உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46 கி.மீ., தூர நெடுஞ்சாலையை சாலையை( என் எச் - 87) ரூ.1,853 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:பரமக்குடி - ராமநாதபுரம் வரையிலான நெடுஞ்சாலை(என்எச் -87) ரூ.1,853 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சாலையை கடல் ஓரம் வழியாக தனுஷ்கோடி வரையில் நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இது இருந்தது. நம்பிக்கை மற்றும் கலாசாரத்துக்கு முக்கிய மையமாக ராமேஸ்வரம் திகழ்கிறது. ராமேஸ்வரத்தை இணைப்பதில் பாம்பன் பாலம் மற்றும் நான்கு வழிச்சாலை திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.https://x.com/narendramodi/status/1940084057221603526

பிரதமர் மகிழ்ச்சி

https://x.com/narendramodi/status/1940027261044044134 இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக வளர்ச்சிக்கு சிறந்த செய்தி . பரமக்குடி ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுலாவையும் அதிகரிக்கும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போது இரு வழிச்சாலையாக உள்ள என்எச்- 87 மாநில நெடுஞ்சாலையை சார்ந்துள்ளது. அதிக மக்கள் தொகை காரணமாக இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் 46.7 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், பரமக்குடி, சத்திரகுடி, ராமநாதபுரம் போன்ற வளரும் பகுதிகளை இணைக்கும்.இது NH-38, NH-85, NH-36, NH-536, and NH-32 ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகளையும், SH-47, SH-29, SH-34 ஆகிய 3 மாநில நெடுஞ்சாலைகளையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, தென் மாவட்டங்கள் முழுவதும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இணைப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களையும், ஒரு விமான நிலையத்தையும், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற சிறு துறைமுகங்களை ஒருங்கிணைப்பதால், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வேகமாக நடைபெறும்.இந்த நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்பட்டதும், இந்த பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், முக்கிய மதம் மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதுடன், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும். இந்தத் திட்டம், நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும்,மறைமுகமாக10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 02, 2025 04:49

"தேர்தல் செலவுக்கு வழி செய்த மத்திய அரசுக்கு நன்றி" இப்படிக்கு திமுக சுருட்டும் குழு.


baskkaran Kg
ஜூலை 01, 2025 19:32

once this NH completed , a sea link road to Srilanka will be taken up... futuer plan.


புதிய வீடியோ