உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்

சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சன் 'டிவி' நிறுவன பங்குகள் தொடர்பாக, கலாநிதி மாறன் மற்றும் ஏழு பேர் பதிலளிக்குமாறு தி.மு.க., - எம்.பி.,யும், கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, 'மனிகன்ட்ரோல் டாட் காம்' செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.சன் குழுமத்தின் பங்கு நடைமுறையை, 2003ம் ஆண்டின் அசல் ஆவணத்தின்படி மீண்டும் மாற்ற வேண்டும் என்று கூறி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மற்றும் ஆறு பேருக்கு, 'லா தர்மா' என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தின் சுரேஷ் என்பவர் வாயிலாக தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.நோட்டீஸில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:* ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, மோசடி நடவடிக்கை மேற்கொண்டு, இதற்காக திட்டம் தீட்டி, ஏமாற்று வழிகளில் கலாநிதி சதி செய்துஉள்ளார்* குடும்பத்தின் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, குறிப்பாக முரசொலி மாறன் மரணப் படுக்கையில் இருந்தபோது, 2003ல் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது * தந்தையின் மரணத்துக்குப் பின், உரிய சட்ட ஆவணங்கள் இன்றி, தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டன* இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் சில மாதங்களுக்குப் பிறகே வெளியான நிலையில், அதற்கு முன்பே சொத்துக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன * பின்னர் நிறுவனப் பங்குகளை கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக் கொள்ள இது உதவியாக அமைந்தது* செப்டம்பர் 2003ல், 12 லட்சம் பங்குகள் சட்டவிரோதமாக, நம்பிக்கை துரோகம் செய்து மாற்றப்பட்டன.* சன் டிவியின் 60 சதவீத பங்குகள், நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களின் எந்தவித ஆலோசனை, ஒப்புதல் இன்றி கலாநிதி பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.* அந்த நேரத்தில் சன் டிவி நிறுவன நிதிநிலை வலிமையாக இருந்தபோது, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அவசியம் எழவில்லை.* அதற்கு முன்பு வரை கலாநிதியிடம் பங்குகள் இல்லாத நிலையில், பங்குகள் மாற்றத்துக்குப் பின் ஐ.பி.ஓ., வெளியிடப்பட்டது. * இதன் வாயிலாக, நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளராக கலாநிதி மாறியதால், குடும்பத்தின் பங்கு 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமானது.* கம்பெனிகள் சட்டத்தின்கீழ் இவை தீவிர குற்றங்கள் என்பதால், அரசின் தீவிர குற்ற விசாரணை அலுவலகமான எஸ்.எப்.ஐ.ஓ.,வின் விசாரணை கேட்கப்படலாம்.* முன்கூட்டியே 12 லட்சம் பங்குகளை தன்வசப்படுத்தியதால், பின்னாளில் பங்கு மதிப்பு 3,500 கோடி ரூபாயாக உயர்வு. 12 லட்சம் பங்குகளுக்கு முகமதிப்பு 10 ரூபாய் என, 1.20 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள 3,498.80 கோடி ரூபாய் நிதி மோசடியாக கருதப்பட வேண்டியுள்ளது.* இதுதவிர, பங்குகள் மீதான டிவிடெண்ட் வாயிலாக, 2023 வரை 5,926 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. 2024ல் மட்டும் 455 கோடி ரூபாய் கிடைத்துள்ளது* சன் டிவி புதிய பங்கு வெளியிடுவதற்கு முன்னதாக, அதில் தயாளு அம்மாளுக்கு இருந்த பங்குகள் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு பின்னர், அந்த பங்குகளின் மதிப்பு பல மடங்கானது* மல்லிகா மாறனுக்கு டிவிடெண்டாக 2005ல் 10.64 கோடி ரூபாய் வழங்கியதாக ஆவணப்படுத்திய நிலையில், அதுபோல வழங்காததன் வாயிலாக, நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் பொய் கூறப்பட்டது.* இந்த குற்றச்செயல்களில் கிடைத்த தொகை வாயிலாக, சன் டைரக்ட், கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், கல் பப்ளிகேஷன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சவுத் ஏசியன் எப்.எம்., சன் பிக்சர்ஸ், தென்ஆப்ரிக்கா, பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ்ஜெட் முதலீடு என ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.* எனவே, 2003ம் ஆண்டுக்கு முந்தைய பங்குதாரர் நடைமுறையை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். முரசொலி மாறனின் வாரிசுதாரர்கள், தயாளு அம்மாள் ஆகியோர், சொத்துக்களின் உரிமையாளர்களாக்கப்பட வேண்டும்.* கடந்த, 2003ல் இருந்து சட்டவிரோதமாக பெற்ற பணப்பலன்களான டிவிடெண்ட், சொத்துக்கள், வருமானம் அனைத்தையும் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோர் முரசொலி மாறனின் வாரிசுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.* இவற்றை செய்யத் தவறினால், சிவில், கிரிமினல், கண்காணிப்பு அமைப்புகள், அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.இதற்கு முன்பாகவும், கடந்த 2024, அக்., 7ம் தேதி, கலாநிதி மாறனுக்கு முதலாவது நோட்டீஸை தயாநிதி மாறன் அனுப்பியதாக தெரிகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 124 )

சிட்டுக்குருவி
ஜூன் 29, 2025 18:44

விடுவாரா தன்னுடைய கமிஸ்ஸின் பணமெல்லாம் அங்குதானே இருக்கின்றது .


C.Jeyabalan
ஜூன் 27, 2025 10:19

சகோதர யுத்தம் வேதனை அளிக்கிறது. பாமர மக்களிடம் பார்த்திருக்கிறேன், ஆனால் இங்கோ பெரும்பணமுதலைகள் மோதுவது படு கேவலமாக உள்ளது.


M Ramachandran
ஜூன் 26, 2025 20:47

இதுல கொலாபாலா புறம் ஏதவது தன்னைக்கு ஆதையமாக புடுங் முடியுமா என்று நுழைந்து அப்பத்தை முழுங்க முடியுமா என்று பாக்குது.


Lion Drsekar
ஜூன் 21, 2025 09:56

முன்னாள் காவல்துறை தலைவர் மற்றும் சி பி இ இயக்குனர் ஓய்வு திரு சி எல் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுவார், நேர்மையாக சம்பாதித்தால் தூக்கம் தானாகவே வரும், என்றைக்கும் யாருக்கும் பயப்படவேண்டாம், இறக்கும் வரையில் நம் பெற்றோர் வாய்த்த பெயருக்கு களங்கம் இல்லாமல் வாழலாம் என்று சொல்வார், வந்தே மாதரம்


suresh guptha
ஜூன் 21, 2025 15:23

BUT FOR GOOD FAMILY PEOPLE


Natarajan Ramanathan
ஜூன் 21, 2025 04:42

இதற்கு முன்பாகவும், கடந்த 2024, அக்., 7ம் தேதி, கலாநிதி மாறனுக்கு முதலாவது நோட்டீஸை தயாநிதி மாறன் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் இந்த செய்தி ஏன் எந்த ஊடகத்திலும் செய்தியாகவோ அல்லது ஒரு விவாதமாகவோகூட வெளிவரவே இல்லை?


M Ramachandran
ஜூன் 21, 2025 01:07

இது கோல் மால் புரம் குடும்பத்திற்க்கு லட்டு ஜாங்கிரி தின்கின்றது போது உண்டாகும் இனிப்பு செய்தி


M Ramachandran
ஜூன் 21, 2025 01:03

பரதெரஸ் குள் குத்து குத்து கும்மாங் குத்து


M Ramachandran
ஜூன் 21, 2025 00:59

கொட கல்லு ப்ரதர்ஸ் குள் குத்து வெட்டு. மண் பொண்ணு பொருளுக்கு சண்டைய்ய்க்கு உறவுதுறைய்ய கன்னைய்ய மறையக்கும். த்தய்யா தக்க நிதிக்கு கல்யாணம் பண்ணி வையத்தது. மஞ்ச துண்டு. காரணம் தன யக்கிடு தித்த வேலையின் ஆணி வேர் தன அந்தரஙக ஆடிட்டர் ஐயங்கார்.ரகசியம் வெளியிலகசிந்து விடாதிருக்க மிரட்டி ஐயங்கார் பெண்ணண்ணெ மாறன் பைய்யன் தகுதித்த தயாவிற்கு மனம் முடித்து வையிற்றெரிச்சலாய்ய்ய கொட்டிக்கொண்டார்.பலன் ஆரம்பமாகி கொண்டிருக்கு. 2G வேலை மரு பாட்டியும் தலை தூக்கா ஆரம்பித்து விட்டது. அப்போனது சென்னையை மாநகர இருந்து அமுக்குனியும் இனி நீதி மன்றம் ஏற வெஆண்டியிருக்கும் . பள்ளு போலான கபிலு சிபிலுக்கு ஆனந்தம். நல்ல காசு பார்க்கலாம்.


Natarajan Ramanathan
ஜூன் 21, 2025 00:00

இந்த செய்தி ஏன் சன் டிவி மற்றும் கலைஞர் டிவி செய்தியாகவோ அல்லது விவாதங்களோ வரவில்லை?


hariharan
ஜூன் 20, 2025 21:55

என்ன தயா இதெல்லாம்........


சமீபத்திய செய்தி