உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சென்னை:தொழிலாளர் நலத் துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக, அரசு பணி போட்டி தேர்வு களுக்கு, 'ஆன்லைன்' வழியே இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் போன்றவை நடத்தும் தேர்வுகளுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளை, காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை; இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, கல்வி தொலைக்காட்சியில் காணலாம். மேலும், https://tamilnaducareerservices.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வகுப்புகள் ஒளிபரப்பை காண்பதுடன், பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ