உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

சென்னை: 'தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்தும், அமைச்சர் காந்தியின் தலையீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு துறையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், அண்ணாமலை சார்பில் அளிக்கப்பட்ட மனு:

பொங்கலுக்கு தலா, 1.68 கோடி வேட்டி, சேலைகள் தயாரிக்க, தி.மு.க., அரசு உத்தரவு பிறப்பித்தது. இலவச வேட்டி, சேலை தயாரிப்பில், ஜவுளி துறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கும், மக்களுக்கு வழங்கப்பட்ட துணிகளின் தரத்திற்கும் சம்பந்தமில்லை.மக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 22 சதவீதம் மட்டுமே பருத்தி, 68 சதவீதம், 'வார்ப் பாலியஸ்டர்' இருப்பது கண்டறியப்பட்டது. அமைச்சர் காந்தியின் கருத்து, வேட்டி தயாரிக்கப்பட வேண்டிய விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது.

கிலோ பருத்தி நுால், 320 ரூபாய்; பாலியஸ்டர், 160 ரூபாய்க்கு 'டெண்டர்' செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாலியஸ்டர் கிலோ, 90 முதல், 110 ரூபாய் வரை சந்தையில் கிடைக்கிறது. அதிகப்படியான பருத்தி நுால் பயன்படுத்தாமல், 60.29 கோடி ரூபாய் இலவச வேட்டி கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இதன் மீது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்புசாமி
பிப் 13, 2024 20:20

வேட்டி இலவசமா கொடுத்து கோமணத்த உருவுறாங்கோ...


DVRR
பிப் 13, 2024 17:04

எங்கும் எதிலும் எப்போதும் எவ்வழியிலும் எந்நாளும் எந்த பணி செய்திடினும் ஊழல் ஊழல் ஊழல் இது ஒன்றே திருட்டு திராவிட மாடல் திருட்டு திராவிட மடியில் அரசின் தலையாய பணி


Parthasarathy Badrinarayanan
பிப் 13, 2024 11:58

அரசின் அடிமைத்துறையிடமே புகார் அளிக்கலாமா. கூலி தரும் முதலாளியை காட்டிக் கொடுப்பார்களா? அமைச்சர்கள் மீதான புகாரில் அடிமைத்துறையின் செயல்பாட்டை நீதிபதி சுடடிக் காட்டவில்லையா?


M Ramachandran
பிப் 13, 2024 08:56

அண்ணாமலைக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் கிடைகிறது


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 14:00

தெருவுல கத்துவான் உருப்படியா இப்ப தான் செஞ்சிருக்கான்


NicoleThomson
பிப் 13, 2024 08:01

முதலில் தமிழகத்தில் டாஸ்மாக், அதன் உடன்பிறப்பு லஞ்சம் இரண்டையும் ஒழித்தால் இந்த கார்பொரேட் குடும்பத்தின் தலைமையும் ஏற்றுக்கொள்வேன் , செய்வார்களா?


அப்புசாமி
பிப் 13, 2024 07:46

இலவசம்னு எதுவும் கிடையாது... விடியா அரசிலும் சரி, ஒன்றிய அரசிலும் சரி.


Sakthi,sivagangai
பிப் 13, 2024 10:42

அப்பறம் எதுக்கு ஓயாமல் அந்த பாஞ்சி லட்சத்தை கேட்டுக்கிட்டே இருக்க?


Duruvesan
பிப் 13, 2024 07:16

கேஸ் குடுத்தவனை தான் விடியலின் போலீஸ் புடிக்கும், விரைவில் அண்ணாமலை கைது, விடியல் தொட்டு பார், சங்கீ உதர் நீ அர்ரெஸ்ட் பண்ணு ,அப்போ தான் மவன் மருமவன் தங்கச்சி எல்லோரும் immediate ah அர்ரெஸ்ட் ஆவாங்க. ஒரே கல்லு ரெண்டு மாங்கா, நீ தனி காட்டு ராஜாவா திரிலாம்


Ramesh Sargam
பிப் 13, 2024 06:20

இன்றைக்கு திரு அண்ணாமலை அவர்கள் அமைச்சர் காந்தியின் வேட்டியை உருவிட்டார். அடுத்து யாரோ...?


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 13:59

ஒரு KM 290 கோடி ரோடு இதற்கு 7600000000000000000000000 கோடி என்று சொன்ன CAG இதற்க்கு யாருதும் உருவ மாட்டாரா உத்தமன்


D.Ambujavalli
பிப் 13, 2024 06:16

ல . ஓ. . துறை அரசின் கைப்பவையாயிற்றே எப்படி நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியும்?


Indian
பிப் 13, 2024 06:04

Oozhal Dravidiya Model


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை