உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இனி நட்பு தான்: உயர் கல்வி துறையின் புதிய அமைச்சர் உறுதி

தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இனி நட்பு தான்: உயர் கல்வி துறையின் புதிய அமைச்சர் உறுதி

சென்னை, தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே இனி நட்பு தான்; இரு தரப்புக்கும் இடையே மோதல் இருக்காது என, உயர் கல்வித் துறையின் புதிய அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.தமிழகத்தில் உயர் கல்வி யின் தரத்தை உயர்த்துவது, 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது குறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதன்பின், அவர் அளித்த பேட்டி: உயர் கல்வித் துறை அறிவிப்புகளின் தற்போதைய நிலையை அறியவும், துறையின் நிறை, குறைகளை அறியவும், உயர் அதிகாரிகள் உடனான இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர் கல்வியை தொடரும் வகையில், 'புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டப் படிப்பை முடித்து பணி வாய்ப்புகளை பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வழிகாட்டவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். கல்லுாரி மாணவர்கள் நல்ல ஆற்றலும், தனித்திறமையும் பெற்று, மற்ற மாநிலங்களை விட, சிறந்த கல்விக் கொள்கை உள்ள மாநிலம் தமிழகம் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்களை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை நிரப்புவது, பதிவாளர், கண்காணிப்பாளர் நியமனம், கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். கல்லுாரி பருவம், 'ஹீரோ' மனப்பான்மையும், குழு மனப்பான்மையும் உள்ள பருவம். அதில், ஒருமித்த கருத்துக்களை ஏற்படுத்தவும், வேற்றுமைகள் ஏற்படாத வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளோம்.சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல் போக்குகளை நீக்க, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்களுடன் பேசி உள்ளோம். மாணவர்களின் போக்குகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட அறிவுறுத்தி உள்ளோம். இனி, தமிழகம் முழுதும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளில், நானே திடீர் கள ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளேன். அப்போது, ஆங்காங்கே உள்ள பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.'தமிழக அரசு, கல்வித் துறை சார்ந்த விஷயங்களில் சட்டப்படி சரியாகவே நடக்கிறது. மாணவர்களின் நலனுக்காக, கவர்னருடன் நல்லுறவில் ஈடுபட்டு, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். துணை வேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில், ஏற்கனவே உள்ள சில விதிகளில், கவர்னர் முரண்பட்டிருந்தார். அவற்றை சரி செய்ய, அனுபவம் மிக்க அதிகாரிகளுடன் ஆலோசிப்போம். கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ravi Kulasekaran
அக் 11, 2024 18:09

அடிக்கும் பல்டி அடிக்கனும் இல்லாட்டி டப்பா டான்ஸ் ஆடும்


தநாவின் பரிதாபம்
அக் 11, 2024 12:52

மாநில தேர்தல் நெருங்குது, வெட்டி வீராப்பு வசணங்கள் இனி உதாவாது. வெட்டியா கம்பு சுத்துனா 0 தான். சுத்தலைனாலும் 0 தான். கொஞ்சம் கவுரவமாக வாக்கு பெறலாம்.அதுக்குத்தான் இவ்வளவும்


krishna
அக் 11, 2024 12:05

ENNA KODUMA PAAMARAN IDHU.ULAGIN MO 1 THALA KAIPULLA POYUM POYUM GOVERNERUKKU MARIYAADHAI KODUPPADHAA.UDAN 200 ROOVAA OOPIS BOY CLUB VENU THALAIMAYIL PONGI EZHAVUM.IDHU ENNA DRAVIDA MODELUKKU VANDHA SODHANAI.


venugopal s
அக் 11, 2024 18:10

நீர் தூக்கத்தில் கூட என் பெயரைச் சொல்லி புலம்புவதாக கேள்விப்பட்டேன்,உண்மையா?


Lion Drsekar
அக் 11, 2024 11:35

தங்கவேலுவும் அவரது மனைவியும் ஒரு திரைப்படத்தில் பூரி செய்வது எப்படி என்று மக்களை சிரிக்கவைத்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது, அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு என்று அவர் மனைவி கூறுவதுபோல், மக்களுக்கு அன்றைக்கே தெரியும் அன்றைக்கே தெரியுமே கதைதான் . ஒருவர் மீது...ஒருவர் சாய்ந்து... ஓடம் போலே…ஆடலாம் ஆடலாம்…. ஒருவர் சொல்ல…ஒருவர் கேட்டு…. ஒருவர் சொல்ல…ஒருவர் கேட்டு… பாடல் நூறு பாடலாம் பாடலாம்… இருவர்ஒருவர் மீது...ஒருவர் சாய்ந்து... ஓடம் போலே ஆடலாம்…ஆடலாம்…., சொட்டுத் தேனைப்போல்.... சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல்>>>பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்....., சொல்லித் தாருங்கள் பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள், நமது கவிஞர்களுக்கு நன்றி, வந்தே மாதரம்


GMM
அக் 11, 2024 09:02

தனி மனித ஒழுக்கம் சார்ந்தது கல்வி, திறமை. தமிழகத்தில் கல்வி பயிலும் அதிக மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், நன்னடத்தை மேம்பட வில்லை. இட ஒதுக்கீடுகளில் சாதி, அரசியல் கட்சிகள் கூட்டணி. அவசர கதியில் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். தற்போதய நிலையில் ஒழுக்கம் பார்க்காமல் வேலை கொடுக்க வேண்டிய அவசியம். பொது வெளியில் இவர்கள் யாருக்கும் உதவுவது இல்லை.? மிகவும் பகட்டாக வாழ விரும்புகின்றனர். ஒரு குடும்பத்திற்கு கல்வி , வேலையில் ஒருமுறை இட ஒதுக்கீடு. தனியார் நிறுவன வேலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வேலை வாய்ப்பு என்று மாநிலம் சட்டம் இயற்ற வேண்டும். தேவைக்கு அதிகமான பள்ளி , கலை, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மூட வேண்டும். அல்லது கல்வி வளம் குறைந்த மாநிலங்களுடன் ஒப்படைக்க வேண்டும். கல்வி , மருத்துவ செலவுகளை வருவாய் ஈட்டும் போது, சம்பந்த பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எதுவும் இலவசம் கூடாது.


பாமரன்
அக் 11, 2024 08:44

அப்படின்னா கெவுனரோட சண்டை போடுவதை ஒரு கொள்கையாக வச்சிருந்தீங்களா இத்தினி நாளாக...??? இவர் அமிச்சராக... அதுவும் கல்வித்துறைக்கு லாயக்கு இல்லை...


bgm
அக் 11, 2024 07:48

இப்பவாவது மாடல் மாடல்னு கூவுவது வேஸ்ட்ன்னு புரியுதா...3 வருஷம் வீணாகி போனது. எல்லாரும் mms, பர்னாலா மாதிரி எஸ் மாஸ்டர்ஸ் இல்லை. மக்களுக்கு எது தேவையை செய்யுங்கள் எல்லாவற்றிலும் அவியல் அரசியல் செய்யாதீர்கள்


raja
அக் 11, 2024 07:47

அதாவது தமிழா, முன்பு எதிர் கட்சியை இருந்த பொழுது இதே திருட்டு ஒன்கொள் கோவால் பிற திராவிடன் சொன்னான் மத்திய அரசின் அடிமைகள் என்று... இப்போ இவனே தான் ஒரு மத்திய அரசின் அடிமையாய் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புலங்காகிதம் அடைகிறான் என்ன மாடலோ....என்ன விடியலோ....


Mani . V
அக் 11, 2024 05:45

முன்பு மட்டும் என்னவாம்? இருவரும் மோதிக் கொள்வது மாதிரி நாடகம் போட்டு மக்களைத்தான் ஏமாற்றினீர்கள். இனியும் அது தொடரும். நாளை குட்டி இளவரசரருக்கு இணை முதல்வராகவோ, மூத்த அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கோபாலபுரம் உத்தரவிட்டால் உடனே நம்ம கவர்னர் ஐயா நிறைவேற்றுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை