உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, மட்டன் குழம்பில் முழு தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பூந்தமல்லி பஸ் ஸ்டாப் அருகே செயல்பட்டு வரும் நாவலடி கொங்குநாடு என்ற தனியார் ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடையின் ஊழியர் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=48hio8yz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், முழு தவளை ஒன்று உயிரிழந்த நிலையில், சாப்பிடும் இலையில் பரிமாறப்பட்டுள்ளது. இதனைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதிலை அளிக்காமல், மழுப்பியுள்ளனர்.இதையடுத்து, தவளை இருந்த உணவை வீடியோவாக பதிவு செய்து விட்டு, சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து விட்டு வாடிக்கையாளர் சென்றுள்ளார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

R.RAMACHANDRAN
மே 05, 2025 07:16

தவளை பாம்பு போன்றவற்றை உண்பவர்கள் இருப்பதால் அவர்களுக்காக செய்திருப்பர்.


naranam
மே 05, 2025 06:49

தயவு செய்து இந்தச் செய்தியை முதலில் நீக்கவும்.


MARUTHU PANDIAR
மே 04, 2025 21:51

தற்போது டிவி சீரியல், மொபைல் ஸ்க்ரீன் நேரம் இப்படி நேரம் நகர்வதால் ஓட்டல்களும் ஜெப்ட்டோ,ஸ்விக்கி , இன்னும் என்னென்னமோ வந்து மனிதனிடமிருந்து காசைப் பறித்துக் கொண்டு வியாதியை கொடுத்து விட்டு கொழுக்கறானுகள் . மனிதனின் சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் முதலீடு. ஓட்டலில் தின்பது பேஷனாகி விட்டது. நினைத்த ஐட்டம் நினைத்தவுடன் கிடைப்பதால்.


MARUTHU PANDIAR
மே 04, 2025 21:45

முன்பெல்லாம் வீட்டிலே தயாரிக்கப்படும் இட்டலி தோசை கூட நினைத்த போது செய்ய மாட்டார்கள் . காரணம் ஆட்டுக்கல்லில் ஆட்டினால் தான் மாவு. பிறகு கிரைண்டிங் மிஷன். அப்போதிலிருந்து சர்க்கரை வியாதி சிறிது சிறிதாக வளர்ச்சி. இப்போது பாக்கெட்டுகளில் மாவு. நினைத்த போது இட்லி தோசை. டயபடீஸ் ஆஸ்பிடல்கள் எண்ணிக்கை அபார வளர்ச்சி.


அப்பாவி
மே 04, 2025 21:38

சாப்பிட்ட உணவுக்கு பணம் குடுத்திருக்காரு. ஆக தவளை குழம்பு டேஸ்ட் ஓக்கே.. தவளையெல்லாம் பாத்து ரொம்ப வருசமாச்சு.. எல்லாத்தையும்தான் வூடு கட்டி ஒழிச்சு கட்டிட்டோமே..


சண்முகம்
மே 04, 2025 21:13

தவளைக்கால் தனி ருசி. விலையும் அதிகம். இந்த உணவு விடுதிக்கு எப்படி கட்டுப்படியாகிறது?


Krishnamurthy Venkatesan
மே 04, 2025 20:45

வீட்டில் சமைத்து குடும்பத்துடன் உண்ணுங்கள். சுகாதாரம், ருசி, ஆரோக்கியம் நிச்சயம். ஒருதோசை வாங்கி சாப்பிடுபவன் அந்த காசில் ஒரு குடும்பமே தோசை சாப்பிட முடியும் என்பதை மறந்து விடுகிறான். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், தேவையில்லாமல் இலவசமாக கிடைத்தாலும் வாங்கமாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் விளம்பரம், ஆடம்பரம், கவர்ச்சிக்கு அடிமையாகி சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.


என்றும் இந்தியன்
மே 04, 2025 20:05

அந்த டேஸ்ட்டே தனி விதமா இருக்கும்??ஆடு சாப்பிடுபவன் மாடு சாப்பிடக் கூடாதா ஏன் தவளை சாப்பிடக்கூடாதா புழு பூச்சி சாப்பிடக்கூடாதா


Ramesh Sargam
மே 04, 2025 18:33

சைனாவில் தவளை,பாம்பையே தின்கிறார்கள். வெறும் தவளைதானே, தின்னுங்க.


India our pride
மே 04, 2025 18:27

மத சார்பின்மை ஹோட்டல்கள் .விவேக் சொன்ன ஜோக் படி தான். பல முறை கொதிக்க வைத்த கருப்பு எண்ணையும், வட நாட்டில் இருந்து ரயிலில் 50 நாட்கள் கழித்து கொண்டு வரப்படும் பலவகை கலந்த மாமிசமும், சீன பெருங்காயமும், கெமிக்கல் கலரும் கலந்த வறுத்த, பொறித்த வகையறாக்கள், மற்றும் பிரியாணி கொஞ்ச நாளில் நெஞ்சு அடைப்பும், கேன்சரும் காரண்டி.