உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி, மணியடிச்சா தண்ணி குடிக்கணும்!: பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்

இனி, மணியடிச்சா தண்ணி குடிக்கணும்!: பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்

கோவை: மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் செயல்பாடுக்கு வந்துள்ளது.பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலின் தாக்கம் மற்றும் விளையாட்டு நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற சாத்தியங்கள் உள்ளன.எனவே, அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நீர்ச்சத்து குறைவை தடுக்கும் நோக்கத்துடன், பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'வகுப்பறை நடவடிக்கைகளை பாதிக்காமல், தினமும் மூன்று முறை, காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என வாட்டர் பெல் அடிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க, 5 நிமிட இடைவேளையும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டம், முதற்கட்டமாக கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அரசு பள்ளி மாணவ மாணவியரின் ஆரோக்கியம் காக்கும் இந்த முயற்சி, தனியார் பள்ளிகளிலும் விரிவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vasan
ஜூன் 29, 2025 16:33

Very good initiative, which other States can also follow. It is no doubt that Tamilnadu is a trend setter. Kudos to Tamilnadu Government and the person who initiated this.


ஸ்ரீ உ.பி
ஜூன் 29, 2025 16:07

திராவிட மாடல் பள்ளி எல்லாத்துலயும் RO தண்ணீர் இருக்கா?


Yasararafath
ஜூன் 29, 2025 15:59

இது புது திட்டமா


Mani . V
ஜூன் 29, 2025 14:39

டேய், வாட்டர் பெல் அடித்து கிழிப்பது இருக்கட்டும். முதலில் அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்குங்கள். கழிவறை வசதியை சரி செய்யுங்கள். வாரம் தவறாமல் மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் நீங்கள், வெளிநாடுகளில் பள்ளிகளில் குடிநீர் இலவசம் என்றும், போதிய கழிவறை வசதி உண்டு என்றும் தெரியுமா? மோடுமுட்டி, மண்ணு மூட்டைகள் உங்களுக்கு அது எங்கே தெரியப்போகிறது? உங்கள் கவனமெல்லாம் எதேதில் எப்படி கொள்ளையடிக்கலாம்? என்பதில்தானே. ஆமா, தமிழ் கடவுள் யாரு?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:34

இதுல ஒரு விஷயம் பாருங்கள், தமிழகத்தில் பொழுது சாய்ந்தவுடன் மணி சத்தம் இல்லாமலே குடிகாரர்கள் டாஸ்மாக் தண்ணி குடிக்க ஆஜர் ஆயிடுறாங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2025 10:53

இந்த திட்டத்தின் நீட்சியாக பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கும். அந்த குடிநீர் உங்க அப்பர் வீட்டுப் பணமா புகழ் அமைச்சரின் தாயார் நடத்தும் ஸ்ப்ரிங் குடிநீராக இருக்கும்.


Iniya
ஜூன் 29, 2025 10:45

இது நல்ல திட்டம். தாகம் எடுப்பவர்கள் வேண்டும்போது குடிக்கட்டும். அந்த நேரத்திற்குள் குடிக்காதவர்களுக்கு இது நினைவு படுத்தும் மணியாக இருக்கும். நீர் தாகம் எடுத்தது குடிக்கவேண்டும் என்பதில்லை, தக எடுக்காமலேயே உடல் இடைக்கு தகுந்தவாறு நீர் பருகவேண்டும்.


A P
ஜூன் 29, 2025 09:00

இப்படி தண்ணீர் குடிக்க வைப்பது நல்லதே அதில் சந்தேகமே இல்ல. ஆனால், எல்லா பள்ளிக்கூடங்களிலும் அதிகப்படியான மாணவ மாணவியரின் சிறுநீர் வெளியேற, தகுந்த எண்ணிக்கையில் கக்கூஸ்கள் இருக்கின்றனவா என்பதே கேள்வி. மாட்டார்களே, மாட்டார்களே. ஏனென்றால் அவனது பிள்ளைகள் அங்கு படிக்கவில்லையே.


vbs manian
ஜூன் 29, 2025 08:47

தாகம் மனித உடலின் இயற்கை உந்துதல். அதை எப்படி வரைபடுத்த முடியும். எல்லோருக்கும் ஒரே சமயம் தாகம் வருமா.வகுப்பறையில் குடிநீர் வசதி செய்து கொடுக்கலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2025 08:43

இந்த ஸ்டிக்கர் அரசுக்கு எப்படியோ ஒரு காரணம் கிடைச்சுருது .1960 களில் எங்கள் பள்ளியில் இருந்த திட்டம்தான் இது. மணி அடிப்பது எட்டாம் வகுப்பு மாணவர்களுள் ஒருவர். யார் மணி அடிப்பது என்று மாணவர்களுக்குள் அன்பு சண்டையே நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை