உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழகம் முதலிடம்

மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழகம் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:“மத்திய அரசு நிதியுதவியிலான சாலை உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 65 இடங்களில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. சாலை அமைப்பு செலவை வசூலித்த சுங்கச்சாவடிகள், நகரப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை விலக்க வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு தொடர்வதற்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 'தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை குறைக்கும் திட்டம் இல்லை' என தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழக மண்டல அதிகாரி வீரேந்தர் சாம்பியால் சமீபத்தில் கூறியிருந்தார்.இந்நிலையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், டில்லியில் நடந்தது. இணை அமைச்சர் அஜய் தம்தா, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்றனர்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் “மத்திய அரசின் நிதியுதவியிலான சாலை உட்கட்டமைப்பு திட்ட பணிகளை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,” என பாராட்டு தெரிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் வேலு, தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

சென்னை கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்ட சாலை, உயர்மட்ட சாலை பணிகளை விரைந்து துவக்க வேண்டும். செங்கல்பட்டு - உளுந்துார்பேட்டை சாலையை எட்டு வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும். திருவாரூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.கன்னியாகுமரி - களியக்காவிளை சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும். திருவண்ணாமலை மற்றும் பல்லடத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.வள்ளியூர் - திருச்செந்துார் சாலை, கொள்ளேகால் - ஹானுார் சாலை, மேட்டுப்பாளையம் - பவானி சாலை, பவானி - கரூர் சாலையை நான்கு வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும்.கோவை புறவழிச்சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட இடர்பாடுகளை களைவதற்கு ராணுவம், வருவாய், நீர்வளம், மின் வாரியம், வனம் உள்ளிட்ட துறைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளுக்கு கட்டண விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
அக் 02, 2024 13:25

நேற்று வரை, நீ யாரோ, நான் யாரோ, இன்று முதல், நீ வேறோ, நான் வேறோ, காணும் வரை, நீ எங்கே, நான் எங்கே, கண்டவுடன், நீ இங்கே, நான் அங்கே?? உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே? , இன்று முதல் நீ வேறோ நான் வேறோ. பாடல் ஆசிரியர் என்றைக்கோ சொல்லிவிட்டார், மொத்தத்தில் மக்களை எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை, விரைவில் குறுநில மன்னரின் தலைமைஇங்கு பாரத ரத்தின பட்டம் உறுதி


சாண்டில்யன்
அக் 02, 2024 09:33

இந்த சந்திப்பில் எள் முருகனை காண்கிறோம் அவர் இந்த துறை மந்திரியா இல்லை தமிழ்நாடு அரசு சார்பா எ வ வேலுவுடன் சென்று கலந்து கொண்டாரா?


Nava
அக் 02, 2024 09:11

கொலுகையும் கொழுக்கட்டயும் இந்த திராவிட மாடல்களுக்கு ஏது


பாமரன்
அக் 02, 2024 09:09

அந்த ஆபீஸர் திமிராக சட்ட விரோத டோலை குறைக்கவோ நீக்கவோ முடியாதுன்னு சொல்றார்... தட்டி கேட்க வேண்டிய கட்சிகாரணுவ ஸ்வீட் டப்பாவை வாங்கிடறானுவ...


Duruvesan
அக் 02, 2024 08:16

கட்கரி இண்டி கூட்டணி பிரதமர் ஆவது உறுதி


Ramesh
அக் 02, 2024 07:54

களியக்காவிளை திருவனந்தபுரம் நான்கு வழி சாலை போட்டு நான்கு வருடம் ஓடி விட்டது. தமிழகம் இது வரை நம் மாநிலத்தில் இன்று வரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. நாகர்கோயிலிலிருந்து களியக்காவிளை வரை ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதுவெல்லாம் ஒரு சாதனையா ?


S.L.Narasimman
அக் 02, 2024 07:48

ஆறு வழிசாலை எட்டு பத்து வழிசாலை வேண்டும்ன்னு இன்று கேட்கிறவங்கே அதிமுக ஆட்சியின்போது சேலம் எட்டு வழிசாலையை கடுமையா எதிர்த்தார்கள்.என்ன மாதிரி கொள்கையோ இவங்களுக்கு.


பாமரன்
அக் 02, 2024 08:52

நச்சு... ஏற்கனவே இருக்கும் சாலையை அகலப்படுத்துவதற்கும்... முழுவதும் புதிதாக விளைநிலங்கள் சேதப்படுத்தி சாலை போட்டு யாரும் வராத ஊர்ல காஃபி டே மாதிரி காஸ்ட்லி டீ ஆத்தறதுக்கும் வித்தியாசம் தெரியனும்னா...


Dharmavaan
அக் 02, 2024 06:46

இந்த பாராட்டு குரங்குக்கு கள்ளும் ஊற்றி தேளும் கொட்டினார் போல்தான்


Mani . V
அக் 02, 2024 05:41

இப்ப புரியுதா? பாஜக வுக்கும், திமுக வுக்கும் இடையில் கள்ளக் காதல் ஸாரி புரிந்துணர்வுக் கூட்டணி உண்டு என்று.


Kasimani Baskaran
அக் 02, 2024 05:19

ஒரு பக்கம் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை வைத்து திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு அடுத்த பக்கம் ஒப்பாரி வைப்பது - இல்லை என்றால் லேபல் ஓட்டுவதை என்னவென்று சொல்வது. சென்னையில் போடும் சாலைகளை பார்த்தல் இவர்களின் திறமை பளிச் என்று தெரியும். ஆகவே போடும் சாலைகள் தரமானதாக இல்லை என்றால் நாலு பேரை தூக்கி உள்ளே வைக்க வேண்டும்.


பாமரன்
அக் 02, 2024 09:00

காசி... நாலு பேரை தூக்கி உள்ள வைக்கனும்னா முதலில் சட்ட விரோதமாக டோல் கலெக்சன் பண்ணிக்கிட்டு இருக்கும் மத்திய அரசு ஆபீஸர்ஸ உள்ள போடனும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை