உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஸ் சிலிண்டர் லாரிகள் ஆக., 1 முதல் ஸ்டிரைக்

காஸ் சிலிண்டர் லாரிகள் ஆக., 1 முதல் ஸ்டிரைக்

சேலம்: காஸ் சிலிண்டர் லாரிகள் ஆக., 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதுகுறித்து, எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்க மாநிலத்தலைவர் செந்தில்செல்வன் கூறியதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை, திருச்சி உட்பட 12 இடங்களில், இண்டேன் காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் உள்ளன. அவற்றில், 2,000 சிலிண்டர் லோடு லாரிகளை இயக்குகிறோம். ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட லோடுகளை நிர்வாகம் தருவதில்லை. தொழில் பாதிக்கப்படுகிறது. லாரி வேகம், 60 கி.மீ.,க்கு மேல் சற்று அதிகமானாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இரவு, 11:00 மணிக்கு மேல், லாரிகளை இயக்கினாலும் அபராதம் என, பல வகைகளில் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பந்த காலம் முடிந்தால் முதலீடு வழங்க வேண்டும். பல ஆண்டாக திருப்பி தரவில்லை. இதை வலியுறுத்தி, வரும் 1ம் தேதி முதல், தமிழகம், புதுச்சேரியில் உள்ள இந்தியன் ஆயில் பாட்டிலிங் ஆலைகளில், சிலிண்டர் லோடு லாரிகள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும். இதனால் தினமும், 4 லட்சம் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை