உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மாணவியர் 35 பேர் மயக்கம்

சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மாணவியர் 35 பேர் மயக்கம்

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில், மாணவியர் 35 பேர் மயக்கம் அடைந்தனர்.திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை திடீரென வாயுநெடி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் மாணவியர் 35 பேர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k8okvucm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பள்ளிக்கு அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்ததா அல்லது பள்ளி ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதா என விசாரணை நடக்கிறது. பள்ளியில் தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

வாக்குவாதம்

தகவல் அறிந்த பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளி முன் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், சுகாதாரத்துறையினர், வாயுக்கசிவு குறித்து ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
அக் 25, 2024 20:03

பள்ளியின் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் அங்கே விஷவாயு சேர வாய்ப்பிருக்கிறது. முதலில் அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புக்களை அகற்றவும்.


KayD
அக் 25, 2024 19:51

பள்ளி எந்த மதம் நடத்தும் பள்ளி எந்த கட்சி நடத்தும் பள்ளி னு வெட்டியா பேசிட்டு இல்லாம பிள்ளைகள் எல்லோரும் சுகமாக வீடு வந்து சேரனும் .எந்த மதத்துகாரனும் அவுங்க அவுங்க இஷட கடவுளை வேண்டினா போதும். அந்த பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கொஞ்சம் support ஆ இருக்கும். மயக்கம் அடைந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளை உங்கள் வீட்டு பிள்ளையா இருந்தால் இப்படி பேசி கிட்டு இருக்க மாட்டீங்க,


Sathyanarayanan Sathyasekaren
அக் 25, 2024 22:41

உன்னுடைய பெயரே கட்டிக்கொடுக்கிறது நீ யார் ஏன் இப்படி முட்டு கொடுக்கிறாய் என்று. இதே அறிவு இதுவரை நடத்த பிரச்சனைகளின் பொது வரவில்லை ஏன்?


Sathyanarayanan Sathyasekaren
அக் 25, 2024 19:14

இது முதல்வர் குடும்பத்திற்கு வேண்டப்பட்ட அந்நிய நாட்டு மதத்தினர் நடத்தும் பள்ளியாக இருக்கலாம் அதனால்தான் பள்ளியின் பெயர் மறைக்கப்பட்டு உள்ளது , இதுவே பத்ம சேஷாத்ரி, விவேகானந்த வித்யாலயா என்று ஹிந்துப்பெயராக இருந்தால் உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பர். திருச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த கிருத்துவ பள்ளியின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது யாருக்காவது தெரியுமா?


Kavi
அக் 25, 2024 19:10

இதில் டான் தமிழக ஊடகம் வெளிப்பாடு தெரிகிறது


raja
அக் 25, 2024 18:15

இந்துக்கள் பள்ளி என்றால் பெயர் ட்சொள்ளி தாளாளர் இந்நேரம் கைது செய்ய பட்டு இருப்பார் இந்த திருட்டு திராவிட ஒன்கொள் விடியாத ஆட்சியில்.. பெயரும் வரலை பக்கத்து தொழிற்சாலை காரணம் என்னும் போதே விடியலுக்கு பிச்சை போட்டவர்களின் பள்ளியாகத்தான் இருக்கும்...


aaruthirumalai
அக் 25, 2024 18:08

பள்ளிக்கூட பெயரை மறைத்த குற்றத்திற்காக என்ன தண்டனை தரலாம்.


என்றும் இந்தியன்
அக் 25, 2024 18:07

தனியார் பள்ளியில் வாயுக்கசிவு 35 மாணவியர் மயக்கம்???பள்ளியில் வாயு??? இண்டேன் காசா???அதுவும் 1000 பேர் படிக்கும்பள்ளியில்????கூட்டிக்கழிச்சி வகுத்துப்பெருக்கி பார்த்தாலும் இதற்கு அர்த்தம் தெரியவில்லையே


Sivaswamy Somasundaram
அக் 25, 2024 16:59

தனியார் பள்ளி என்றால் பெயர் சொல்லக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 25, 2024 18:49

நோ ..... நோ .... விக்கிரக வழிபாட்டாளர்கள் நடத்துற பள்ளியா இருந்தா கட்டாயம் பேரு போடுவோம் ...


krishnamurthy
அக் 25, 2024 16:57

எந்த பள்ளி என குறைவதில் தயக்கமா


எஸ் எஸ்
அக் 25, 2024 16:24

பள்ளிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா?


Ptr Mkd
அக் 25, 2024 20:07

விக்டோரியா பள்ளி கிறிஸ்தவ பள்ளி . அதுதான் பெயர் போடல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை