வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இறைவா சேதம் இல்லாமல் இருக்கனெம்
கோவை: கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்து தொடர்ந்து எரிவாயு வெளியேறியது. பின்னர் 8 மணி நேரத்திற்கு பிறகு, டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இன்று (ஜன.,03) அதிகாலை சென்ற டேங்கர் லாரி, வளைவில் திரும்ப முடியாமல் கவிழ்ந்தது. லாரியில் இருந்த புல்லட் டேங்கர், தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டது. இந்த அதிர்வில் புல்லட் டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dydh7nbq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயு கசிவை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர். டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது. 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
லாரி டிரைவர் பேட்டி
லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொச்சியிலிருந்து வந்த போது இரவு 2.30 மணிக்கு விபத்து நடந்தது. நான் மெதுவாகத்தான் ஒட்டி வந்தேன். எனக்கு 2 தோள்பட்டைகளிலும் அடிபட்டுள்ளது. 10 கி.மீ ஸ்பீட்ல கூட வரல.. அங்க இருந்து வந்து வளையும் போது திடீர்னு லாரியில் ஆக்சில் கட் ஆகி விழுந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.புல்லட் டேங்கர் கவிழ்ந்த இடத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், 'சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு அனைவரையும் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. திருச்சியில் இருந்து எமர்ஜென்சி மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அது வந்தவுடன் புல்லட் டேங்கரை அகற்றும் பணி தொடங்கும். அதற்கு முன்னதாகவே டேங்கரிலிருந்து காஸ் அகற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், வருவாய்த்துறையினர், தீயணைக்கும் துறையினர் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் உதவியுடன் மீட்பு பணி நடந்து கொண்டிருக்கிறது' என்றார்.
கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கவிழ்ந்த சமையல் காஸ் டேங்கரை அகற்றும் பணி நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 35 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இறைவா சேதம் இல்லாமல் இருக்கனெம்