உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் துவங்கியது

காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் துவங்கியது

நாமக்கல்:ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி, தென்மண்டலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. நாமக்கல்லில், தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க, அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, 2025 - 30ல் டெண்டர் நடவடிக்கை குறித்து பேசினார். தொடர்ந்து, அவர் கூறியதாவது: தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான, 5,500க்கும் மேற்பட்ட புல்லட் காஸ் டேங்கர் லாரிகள், இந்தியா முழுதும் இயங்கி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை டெண்டர் மூலம், வாடகைக்கான விலைப்புள்ளியை நிர்ணயம் செய்து வழங்கி வருகின்றன. 2025 - 30ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில், பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. அந்த விதிமுறைகளை தளர்த்த கோரி, கடந்த மார்ச்சில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 30ல் நடந்த பேச்சில் தீர்வு காணப்பட்டதால், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், 3,500 காஸ் டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள், நாமக்கல் வந்து நேரடியாக பேச்சு நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இவற்றை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளோம். போராட்டத்தால், ஐந்து மாநிலங்களில் காஸ் தட்டுப் பாடு ஏற்படும். 6,000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் ஆயில் நிறுவனங் கள், அனைத்து லாரிகளுக் கும் வேலைவாய்ப்பு கிடைக் கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை